Categories: Cinema News latest news

இந்த படத்திற்காக காயத்ரிக்கு போட்ட முதல் கன்டீசன்..! இயக்குனர் கூறியதை கேட்டு வாயடைத்து நின்ற நடிகை…

தமிழ் சினிமா இன்னும் கண்டுகொள்ளாத நடிகைகளின் பட்டியலில் முதலில் இருப்பவர் நடிகை காயத்ரி. நடிப்பிற்கென்றே பிறந்தவர் போல் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் குறிப்பிட்ட இயக்குனர்களை மட்டும் தன் பக்கம் ஈர்த்தவர்.

பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் முன்னனி நடிகைகளை தேடி போகும் நிலையில் இவரின் நடிப்பு இன்னும் அவர்கள் கண்ணுக்கு தென்படவில்லை போலும். கிட்டத்தட்ட விஜய்சேதுபதியுடன் மட்டும் இணைந்து 9 படங்களில் நடித்துள்ளார்.

கிராமத்து கதைகளை மையமாக வைத்து எடுக்கும் படங்களில் இவர் தான் டாப் ஹீரோயின். அந்த அளவிற்கு கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடுவார். அண்மையில் வெளியான மாமனிதன் படத்தில் கூட இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் மாமனிதன் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமியிடம் கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு தன்னை எப்படி தயார் செய்யவேண்டும் என கேட்டிருக்கிறார் காயத்ரி. படம் கிராமத்து கதையை மையப்படுத்தியிருப்பதால் ஐ ப்ரோ மட்டும் பண்ண வேண்டாம் என கூறினாராம்.இதை கேட்டதும் காயத்ரி மிகவும் வருத்தப்பட்டதாக கூறினார். படம் முழுக்க நான் ஐ ப்ரோ பண்ணவே வில்லை என வருத்தத்துடன் கூறினார்.

Published by
Rohini