Connect with us
banner

ஃபகத்திடம் இத சொன்னதும் மனுஷன் வெட்கப்பட்டார் பாருங்க…! காயத்ரி சொன்ன அந்த ரகசியம்…

gayu_main_cine

Cinema News

ஃபகத்திடம் இத சொன்னதும் மனுஷன் வெட்கப்பட்டார் பாருங்க…! காயத்ரி சொன்ன அந்த ரகசியம்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘ விக்ரம்’. இந்தப் படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், நடிகை காயத்ரி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடித்து அசத்தியிருக்கிறார்.

gayu1_cine

இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். கமலின் கெரியரில் 4 வருடங்கள் கழித்து விக்ரம் திரைப்படம் வெளியானது ரசிகர்களுக்கு ஒரு விருந்து சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சந்தனமாக விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மெய்சிலிர்க்க வைத்தது.

gayu2_cine

மலையாள நடிகர் ஃபகத் பாசில் அமராக படத்தில் சேர்ந்திருப்பது கூடுதல் வலுவை சேர்த்தது. அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை பரவசப்படுத்தியது. கமல், லோகேஷ் ஏற்கெனவே ஃபகத் பாசிலை பற்றி நிறைய மேடைகளில் பேசியுள்ளனர். அதாவது ஃபகத்தின் நடிப்பை அவர் கண்களில் காட்டுவார் என்று.

gayu3_cine

அதே போல் தான் அண்மையில் அந்த படத்தில் ஃபகத்திற்கு மனைவியாக காயத்ரி நடித்திருப்பார். அவர் கூறும் போது ஃபகத்தை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவருடைய கண்களுக்கு நான் தீவிர ரசிகை. அதை அவரிடமே சொல்லியிருக்கேன். இதை நான் சொல்லும் போது வெட்கத்தில் தலையை சொறிஞ்சுக்கிட்டே அப்படியே நழுவி விட்டார் என்று அண்மையில் ஒரு பேட்டியில் காயத்ரி கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top