தன் பேவரட் நடிகையை டிவி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த விஜய் சேதுபதி!

by பிரஜன் |   ( Updated:2021-10-12 08:49:44  )
vijay sethupathi
X

vijay sethupathi

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி!

சினிமா பின்புலம் ஏதும் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அப்பா வாங்கி வைத்த 10 லட்ச கடனை அடைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக சினிமாவில் நுழைந்தவர் விஜய் சேதுபதி. பின்னர் சினிமா மீது ஏற்பட்ட போதையால் சிறந்த நடிகராக வலம் வரத்துவங்கினார்.

gayathri

gayathri

ஹீரோ, வில்லன் , குணசித்திர வேடம், சிறப்பு தோற்றம் என எது கிடைத்தாலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி நட்சத்திர நடிகர்களையே வாய் மேல் விரல் வைத்து வியக்க வைத்தார்.

இந்நிலையில் சன் டிவியில் தான் தொகுத்து வழங்கி வரும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் தனக்கு இஷ்டமான நடிகையான காயத்ரியை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து கிசுகிசுப்புகளுக்கு ஆளாகியுள்ளார். இதற்கு முன் இவர்கள் குறித்து பல கிசுகிசுக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story