அந்த படத்துல விலைமாதுவாக நடிக்க இருந்தது நான்தான்... புதுபேட்டை சீக்ரெட்டை உடைத்த நடிகை....!

ஒரு படம் என்றால் அதற்கு கதை தான் மிக முக்கியம். அதிலும் அந்த கதையை திறம்பட காட்சிப்படுத்தும் விதம் தான் படத்திற்கு கூடுதல் பலமே. இவை அனைத்தையும் பக்காவாக செய்யும் இயக்குனர் என்றால் அது செல்வராகவன் தான். இதுவரை இவர் தமிழில் இயக்கிய அத்தனை படங்களும் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
அந்த வரிசையில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது தனுஷ் நடிப்பில் வெளியான வண்ணாரப்பேட்டை படம் தான். இந்த படம் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் அந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி இருந்தன.

dhanush-sneha
அதிலும் குறிப்பாக நடிகை சினேகாவின் கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. காரணம் இவர் இந்த படத்தில் ஒரு விலைமாதுவாக நடித்திருப்பார். என்னதான் விலை மாதுவாக இருந்தாலும் அவர்களுக்கென ஒரு மனசு இருக்கும் ஆசை இருக்கும் என்பதை மிகவும் அழுத்தமாக கூறியிருப்பார்கள்.
மேலும் பிற நடிகைகள் நடிக்க தயங்கும் ஒரு கேரக்டரை மிகவும் தைரியமாக ஏற்று நடித்ததற்கே சினேகாவை பாராட்டலாம். இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் ஒன்றை பிரபல நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

gayathri raguram
அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காயத்ரி ரகுராம் கூறியதாவது, "புதுபேட்டை படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது காயத்ரி நான் தான். இதற்காக போடோஷூட் எல்லாம் எடுத்த நிலையில் அந்த படத்தை இயக்க ஆறு மாதங்கள் ஆகும் என இயக்குனர் கூறியதால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன்.
இதேபோல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் நடிகை சிம்ரன் அவருடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார். ஆனால் அந்த பாடலில் சிம்ரனுக்கு பதில் நான் தான் நடனமாட இருந்தேன். சில காரணங்களால் அதிலும் என்னால் ஆட முடியாமல் போய்விட்டது" என கூறியுள்ளார்.