திணறிய நடிகை... கடுப்பான இயக்குனர்... ரஜினி பட ஷூட்டிங்கில் நடந்த களேபரம்...

by Akhilan |
திணறிய நடிகை... கடுப்பான இயக்குனர்... ரஜினி பட ஷூட்டிங்கில் நடந்த களேபரம்...
X

rajinikanth

பிரபல நடிகை கீதா தனது முதல் படத்தில் செய்த செயலால் இயக்குனரே கடுப்பாகி பேக்கப் செய்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை கீதா 1978ம் ஆண்டு சினிமாவின் எண்ட்ரி கொடுத்தார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பைரவி என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் முதல் படத்தில் ரஜினிக்கு இவர் தங்கையாக நடித்தார். இதில் ரஜினியின் சகோதரியாக நடித்தார். நிறைய மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

bairavii

200 திரைப்படங்களில் நடித்துள்ள கீதா 1997ல் திருமணத்தின் காரணமாக, பல காலம் நடிக்கவில்லை. பின்னர், சந்தோஷ்‌ சுப்ரமணியம் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் கீதாவின் முதல் படத்தில் அவருக்கு தமிழ் உச்சரிப்புகளே சரியாக வரவில்லையாம். இதனால் அப்படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கர் கடுப்பாகி பேக்கப் செய்துவிடலாம் எனக் கூறிவிட்டாராம்.

geetha

ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு பதறியே விட்டதாம். இப்படி படப்பிடிப்பு ரத்தானால் தான் போட்ட பணம் பெரிய அளாவில் நஷ்டம் ஆகும் என்பதால் கீதாவிற்கு தமிழ் சொல்லிக் கொடுக்க களமிறங்கினார். ஒவ்வொரு வரியாக அவருக்கு சொல்லிக்கொடுத்து தான் படத்தினை முடித்தார்களாம். அப்படி முதல் படத்தில் நடிக்கத் திணறிய கீதா, அதற்கடுத்த படங்களில் சக்கை போடு போட்டார் என தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் கலைஞானம் தெரிவித்து இருக்கிறார்.

Next Story