100வது படத்தில் ஃபிளாப் கொடுத்த ஜெமினி கணேசன் - சாவித்ரி!.. இப்படி ஆகிப்போச்சே!...
தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். இவரின் நிஜப்பெயர் ராமசாமி கணேசன். ஆனால், ஜெமினி நிறுவனத்தில் பணிபுரிந்ததாதால் இவருக்கு ஜெமினி கணேசன் என்கிற பெயர் வந்தது. பல திரைப்படங்களில் காதல் ரசம் கொட்டும் காட்சிகளில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அடுத்த இடத்தில் ஜெமினி கணேசன் இருந்தார். அப்போதையை ஹீரோயின்களில் பலருடன் இவர் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
1947ம் வருடம் மிஸ் மாலினி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். நடிகை சாவித்ரியுடன் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரையே திருமணமும் செய்து கொண்டார். 1970ம் வருடம் வெளிவந்த காவிய தலைவி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றார். கிட்டத்தட்ட 200 திரைப்படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார்.
ஜெமினி கணேசனின் 100வது படம் சீதா. 1967ம் வருடம் வெளிவந்த இந்த படத்தில் ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக சாவித்ரி நடித்திருந்தார். பல ஹிட் படங்களை கொடுத்த ஏ.பி.நாகராஜன் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் படுதோல்வி அடைந்தது.
அதேபோல், நடிகையர் திலகம் என அழைக்கப்பட்டவர் சாவித்ரி. ஜெமினியுடன் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்தவர். பாசமலர் திரைப்படத்தில் சிவாஜிக்கு கொஞ்சமும் சளைக்காமல் நடித்திருப்பார். இவரும் 200 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவரின் நூறாவது திரைப்படம் கொஞ்சும் சலங்கை. எம்.வி.ராமன் இயக்கிய இந்த திரைப்படம் 1962ம் வருடம் வெளியானது.
இந்த படத்தை விமர்சகர்கள் பலரும் பாராட்டியிருந்தனர். ஆனால், வியாபார ரீதியாக இப்படம் தோல்வி அடைந்தது. இந்த படத்தில் சாவித்ரிக்கு ஜோடியாக ஜெமினி கணேசனே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீ யார் என கேட்டார் இளையராஜா!.. சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பரணியின் தற்போதைய நிலை!..