தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக பாடல் ஆசிரியராக அரசியல்வாதியாகவும் பன்முக கலைஞராக திகழ்ந்தவர் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன். நடிகர்களிலேயே லட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர் எஸ் எஸ் ராஜேந்திரன். இவரின் அழுத்தமான தமிழ் உச்சரிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது.

1950 ,60களில் தமிழ் திரையுலகில் தனது அழகு, திறமை, அறிவு ஆகியவற்றால் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் எஸ் எஸ் ராஜேந்திரன். கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவரை பூம்புகார் ,மறக்க முடியுமா போன்ற திரைப்படங்களின் மூலம் இவரை அடிக்கடி நாம் நினைவுக்கு கொண்டு வர முடியும்.
ஆரம்ப காலங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர் பராசக்தி திரைப்படத்தின் மூலம் சிவாஜி கணேசனுடன் இணைந்து அந்தப் படத்தில் முதன்முதலில் அறிமுகம் ஆனார். ஒரு சில படங்கள் ஆரம்பத்தில் தோல்வியை கொடுத்ததால் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார் எஸ் எஸ் ராஜேந்திரன்.
இதையும் படிங்க : அரசியல் புரிதல் இல்லாம தப்பா படம் எடுத்துட்டேன்- வருந்திய மாவீரன் இயக்குநர்
அதன் பிறகு 1957ஆம் ஆண்டில் முதலாளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல படங்கள் வெற்றி பாதையை நோக்கி ஓடியது. இந்த நிலையில் ஜெமினி அதிபரான எஸ் எஸ் வாசன் ஹிந்தியில் வெளிவந்த ஜிந்தகி என்ற திரைப்படத்தை தமிழில் உருவாக்க நினைத்து அந்தப் படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரனை ஹிரோவாக நடிக்க நினைத்திருந்தார்.

இதை எஸ் எஸ் ராஜேந்திரனிடமும் தெரிவித்து ஒரு தடவை அந்த ஹிந்தி படத்தை பார்க்க வைத்தார். எஸ் எஸ் ராஜேந்திரனும் அந்த படத்தை பார்த்து அவருக்கு ஆச்சரியமாகிவிட்டது. ஏனெனில் இதே கதை அமைப்பு இதே கதையில் ஏற்கனவே எஸ் எஸ் ராஜேந்திரன் தங்க ரத்தினம் என்ற படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார். அதனால் தான் இரண்டு கதை அமைப்பும் ஒன்று போல் இருக்கிறது என ஆச்சரியப்பட்டார்.
இதையும் படிங்க : டிக்கெட் விலையை குறைக்கனுமா? அந்த நாலு ஹீரோவாலதான் முடியும் – விஜய் ஆண்டனி சொன்ன யோசனை
இதை எஸ் எஸ் வாசனிடம் கூறும்போது”ஏற்கனவே இதே கதை அமைப்பில் நான் ஒரு படத்தில் நடித்து விட்டேன் என்றும் இந்த படத்தில் நான் நடித்தால் மக்களுக்கு நான் ஏற்கனவே நடித்த தங்கரத்தினம் படத்தின் கதைதான் ஞாபகத்திற்கு வரும் என்றும் அதனால் இதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்றும்” கூறி விலகி விட்டாராம்.

அதன் பிறகு அந்தப் படத்தில் ஜெமினி கணேசனை நடிக்க வைத்திருக்கிறார் எஸ் எஸ் வாசன். வாழ்க்கைப் படகு என பெயரிடப்பட்ட அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லையாம். அதை பார்த்த ரசிகர்களுக்கு எஸ்எஸ் ராஜேந்திரன் நடித்த தங்கரத்தினம் படத்தைப் போன்றே இருக்கிறது என நினைத்துக் கொண்டார்களாம். அதனாலேயே அந்த படம் ஓடவில்லையாம்.
