வேற வழியில்லாமல் வந்த பாதையை தேடிய ஜெமினி! ஏவிஎம் நிறுவனத்தால் காதல் மன்னனுக்கு நேர்ந்த கொடுமை
தமிழ் சினிமாவில் காதல் இளவரசனாக வலம் வந்தவர் நடிகர் ஜெமினிகணேசன். எம்ஜிஆர், சிவாஜி இவர்களுக்கு ஈடாக டஃப் கொடுத்து வந்த நடிகர் ஜெமினிகணேசன். 50, 60களில் சினிமாவை இவர்கள் மூவரும் தான் தன் வசம் வைத்திருந்தனர்.
போட்டிப் போட்டுக் கொண்டு சளைக்காமல் அவரவர் திறமையில் பல படங்களில் நடித்து வெற்றி கொடி நாட்டி வந்தனர். ஜெமினியின் படங்கள் பெரும்பாலும் காதலை மையப்படுத்தி அமைந்த படங்களாகவே வெளிவரும். அதனாலேயே காதல் மன்னன் என அழைக்கப்பட்டார்.
குறிப்பாக சாவித்ரியின் மீதான காதலும் ஒரு காரணம். இருவரும் திருமணம் செய்து கொண்டு அதன் பிறகும் ஒன்றாக படங்களில் நடிக்க தொடங்கினார்கள். காலங்கள் போக போக ஜெமினி குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார்.
குறிப்பாக அவ்வை சண்முகி படத்தில் அவரின் காமெடி அனைவரையும் சிரிக்க வைத்தது. இந்த நிலையில் ஜெமினி நடிப்பில் வெளியான ராமு படத்தின் ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியானது. அதாவது ஏவிஎம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜெய்சங்கர்தானாம்.
ஆனால் அப்போது ஜெமினிக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் நேரிடையாக ஏவிஎம் சரவணனிடமே சென்று உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு இருந்தால் கொடுங்கள் என்று ஜெமினி கேட்டாராம். அப்போது ஜெமினி 90000 சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தாராம்.
ஜெமினி இப்படி சொன்னதும் ஜெய்சங்கர், முத்துராமன் இவர்களுக்கெல்லாம் 10000, 12000 தான் சம்பளமாக கொடுக்கிறோம். உங்களை வைத்து எடுத்தால் அதிகமாக அல்லவா கொடுக்க வேண்டும் என சரவணன் சொல்ல உடனெ ஜெமினி இல்லை , இல்லை நான் இந்தப் படத்திற்காக சம்பளத்தை பற்றி பேசவே மாட்டேன் என்றும் நீங்கள் எவ்ளோ சம்பளம் கொடுத்தாலும் சர் என்றும் ஜெமினி கூறினாராம்.