அந்தக் காலத்தில் காதல் மன்னன் யார் என்றால் டக்கென்று ஜெமினிகணேசன் என்று தான் சொல்வோம். மூவேந்தர்களாக திகழ்ந்த சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் ஆகிய மூவரும் ஒரே புகழை அடைந்தனர் மக்கள் மனதில்.
இருந்தாலும் இவர்களில் முதல் வெள்ளிவிழா படத்தை கொடுத்தது ஜெமினி கணேசன் தான். அதுவும் கல்யாண பரிசு என்ற படத்தின் மூலம் வெள்ளி விழாவை எட்டினார். இவரின் ஹேண்ட்ஸமான லுக்கும் அழகும் பெண் நடிகைகளை இவர் பக்கம் இழுத்தது.
இதையும் படிங்க : தான் நடித்த படத்தைப் பார்க்க டிக்கெட் கேட்ட ரஜினி…எரிந்து விழுந்த மேனேஜர்..!
ஏராளமான நடிகைகள் இவரை காதலிக்க தொடங்கினர். இது ஒரு பக்கம் இருந்தாலும் இவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெற தொடங்கியது. இப்படியே போய்க் கொண்டிருக்க ஒரு காலகட்டத்தில் வயசாக அப்படியே வீட்டில் உட்கார்ந்து விட்டார். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்ற பழமொழிக்கேற்ப இவரும் திகழ்ந்தார்.
வயதானாலும் இவரால் வீட்டில் இருக்க முடியவில்லை. ஆகவே இவருக்கு உறவினராகவும் பிரபல சின்னத்திரை தயாரிப்பாளாராகவும் நடிகையாகவும் இருக்கும் குட்டி பத்மினியிடம் ‘ஏதாவது நாடகம் இருந்தால் போடு , எனக்கு இதிலிருந்து விடுதலை கொடு’ என கேட்டாராம். ஜெமினியின் ஆசையை அறிந்த குட்டி பத்மினி அவரது மனைவியிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவரின் மனைவி ‘அவரை பூவாக பார்த்துக் கொண்டிருக்கிறோம், வெளியில் சாப்பிட்டால் ஒத்துக்காது’ என கூறியிருக்கிறார். ஆனால் குட்டி பத்மினியோ அவரை நான் பார்த்துக் கொள்கிறேன், நான் பொறுப்பு என கூறி குட்டி பத்மினி தயாரித்த பிரபல சீரியலான கிருஷ்ணதாசியில் நடிக்க வைத்திருக்கிறார். அந்த சீரியல் பெரும் வரவேற்பை பெற்றது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…