Cinema History
சூப்பர்ஸ்டாருடன் காதலில் இருந்த ஜெமினி கணேசனின் மகள்… போராடி மீட்ட மனைவி…
Superstar: சினிமாவில் கல்யாணம் செய்துக்கொண்ட பின்னரும் கூட நடிகர்கள் நடிகைகளுடன் காதலில் விழுவது தொடர்கதையாக தான் இருக்கிறது. இப்போது மட்டுமல்ல 80ஸ்களிலும் சூப்பர்ஸ்டார் ஒருவர் வாழ்க்கையிலேயே இது நடந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
பாலிவுட்டில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ’பிக் பி’ அமிதாப் பச்சன். இவர் நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயா பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்துக்கொண்ட பின்னரே அமிதாப் சினிமாவில் வளர தொடங்கினார். இத்தம்பதிக்கு அபிஷேக் பச்சன், ஸ்வேதா பச்சன் என மகனும், மகளும் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: நம்ம பசங்க தான் ஒளிஞ்சிருக்க லட்சணம் அப்படி… வசமாக சிக்கிய சூர்யா44 மியூசிக் டைரக்டர்…
ஆச்சரிய தம்பதிகளாக இருக்கும் இவர்களுக்கு முதலில் வாழ்க்கை பெரிய போராட்டமாகவே இருந்தது. 1976ம் ஆண்டு டூ அஞ்சானே படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை ரேகா இணைந்து நடித்தனர். அப்படத்தில் இருந்தே இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த சமயத்தில் ஜெயா பச்சனுடன் அமிதாப் திருமண பந்தத்தில் இருந்தார்.
அமிதாப் பச்சன் மற்றும் ரேகா இருவரும் காதலில் இருந்தப் போது ரேகாவின் நண்பரின் பங்களாவில் ரகசியமாக சந்தித்து கொண்டனர். ரகசியமாக வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது சக நடிகர் ஒருவர் ரேகாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய அமிதாப் சண்டைக்கே சென்று விடுகிறார். அந்த சம்பவத்துக்கு பின்னர் இருவரிடமும் கேட்கவே முடியாத அளவு விஷயம் வெளிச்சத்துக்கு வந்துவிடுகிறது.
இதையும் படிங்க: அப்படி மட்டும் பாக்காத!.. எங்க ஹார்ட்டு வீக்கு!.. நாட்டுக்கட்ட உடம்பை காட்டும் விஜே பார்வதி…
ரேகாவை தன்னுடைய வீட்டு சாப்பிட அழைக்கும் ஜெயா பச்சன் என்ன ஆனாலும் நான் அவரை விட்டு போக மாட்டேன் என உறுதியாக சொன்னாராம். அமிதாப் தன் காதலை வெளிகாட்டாமல் இருந்த போதும் ரேகா பல இடங்களில் அதை ஒப்புக்கொண்டுள்ளார். அந்த சமயத்தில் முக்கோண காதல் கதையில் இந்த மூவரை நடிக்க வைக்க பாலிவுட் பிரபல தயாரிப்பாளர் யாஷ் முடிவெடுக்கிறார்.
சில்சில்லா படத்திற்கு ஜெயா பச்சன் மட்டும் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அப்படத்தின் கிளைமேக்ஸில் ஹீரோ மனைவியிடமே செல்லுமாறு இருந்ததால் அப்படத்தினை ஓகே செய்தார் ஜெயா. சில்சில்லா படத்தில் மூவரும் இணைந்து நடித்தனர். இதுதான் அமிதாப் பச்சன் மற்றும் ரேகா இணைந்து நடித்த கடைசி படமாக இருந்தது. ஜெமினி கணேசனின் முதல் மகள் தான் நடிகை ரேகா என்பது குறிப்பிடத்தக்கது.