வாய்ப்பு கேட்ட பாலச்சந்தர்.. முடியாது என மறுத்த ஜெமினி கணேசன்!.. இப்படியெல்லாம் நடந்திருக்கா!..
தமிழ் சினிமாவில் புதிய மற்றும் புரட்சிகரமான கதைகளை எழுதி இயக்கியவர் பாலச்சந்தர். நாடங்களை இயக்கி கொண்டிருந்தவர் ஒருகட்டத்தில் சினிமா இயக்குனராக மாறினார். இவரின் திரைப்படங்களில்தான் பெண்களுக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டது. துணிச்சலான பெண் கதாபாத்திரங்களை ரசிகர்களுக்கு காட்டியவர் இவர்.
ரஜினி, கமல் எனும் இரண்டு முக்கிய நடிகர்களை உருவாக்கியவர் இவர். கமலுக்கு விதவிதமான கதாபாத்திரங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தவர். கோபக்கார ரஜினி ஒருவர் வார்த்தைக்கு கட்டுப்படுவார் எனில் அது பாலச்சந்தருக்கு மட்டும்தான். ஆனால், அப்படிப்பட்ட பாலச்சந்தர் வேலை தேடி அலைந்த சம்பவத்தைதான் இங்கே பார்க்கப்போகிறோம்.
1949ம் ஆண்டு தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிய போது ஜெமினி ஸ்டுடியோ நிறுவனத்தில் வேலை கேட்டு ஒரு கடிதம் எழுதினார். ஒரு வாரம் கழித்து அவருக்கு ஒரு பதில் கடிதம் வந்தது. அதில், ‘தற்போது இங்கு உங்களுக்கு ஏற்றார்போல் எந்த வேலையும் இல்லை. இருந்தால் தெரியப்படுத்துகிறோம்’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஆர்.கணேஷ் என்பவர் கையெழுத்திட்டிருந்தார்.
அந்த ஆர்.கணேஷ்தான் பின்னாளில் பல படங்களில் நடித்த ஜெமினி கணேசன் ஆவார். ஜெமினி நிறுவனத்தில் வேலை செய்ததால் அவருக்கு அந்த பெயர் வந்தது. பாலசந்தருக்கு வேலை இல்லை என சொன்ன ஜெமினி கணேசன் பின்னாளில் பாலச்சந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜிக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கம் இருக்கா?? என்ன இருந்தாலும் அவரும் ஒரு மனுஷன்தானே!