சோ.ராமசாமியால் பட வாய்ப்புகளை இழந்த ஜெமினி கணேசன்… தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு…
சோ என்று அழைக்கப்படும் சோ.ராமசாமி, தமிழின் பழம்பெரும் நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்ந்தவர் சினிமாவில் மட்டுமல்லாது நாடகத்துறையிலும் கோலோச்சிக் கொண்டிருந்தவர் சோ. குறிப்பாக இவர் இயக்கிய “துக்ளக்” என்ற நாடகம் மிகவும் பிரபலமாக அறியப்பட்டது. மேலும் அந்த நாடகத்தை திரைப்படமாகவும் உருவாக்கினார் சோ.
பின்னாளில் “துக்ளக்” என்ற பெயரில் ஒரு அரசியல் வார இதழையும் தொடங்கினார் சோ. அவர் மறைந்த பிறகும் “துக்ளக்” இதழ் இன்று வரை மிகவும் பிரபலமான வார இதழாக திகழ்ந்து வருகிறது.
சோ.ராமசாமி “பார் மகளே பார்” என்ற திரைப்படம் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் ஜெமினி கணேசன் நடித்த “தேன் மழை” என்ற திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதினார் சோ.
“தேன் மழை” திரைப்படத்தை தயாரித்து இயக்கியவர் முக்தா சீனிவாசன். முக்தா சீனிவாசனும் சோவும் மிகச் சிறந்த நண்பர்கள். இந்த நிலையில் “தேன் மழை” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சோ எழுதிய வசனங்களை படித்து பார்த்த ஜெமினி கணேசன், “இதெல்லாம் ஒரு வசனமா?” என வசனப்பிரதியை தூக்கி எறிந்து விட்டார்.
இதனை பார்த்த சோ, மிகவும் கோபம் கொண்டு ஜெமினி கணேசனிடம் சண்டை போட தயாராக எழுந்தார். ஆனால் ஜெமினியுடன் சண்டைப் போட்டால் படம் நின்றுபோகும் என்பதால் இயக்குனர் முக்தா சீனிவாசன், சோவை தடுத்தி நிறுத்தி சமாதானப்படுத்தி உட்கார வைத்தார்.
சோ அன்று தனது நண்பருக்காக பெருந்தன்மையோடு நடந்துகொண்டார். இந்த பெருந்தன்மைக்காக முக்தா சீனிவாசன் என்ன செய்தார் தெரியுமா?
முக்தா சீனிவாசன் அதன் பின் எந்த திரைப்படங்களிலும் ஜெமினி கணேசனை ஒப்பந்தம் செய்யவில்லையாம். தனது நண்பர் சோ அன்று காட்டிய பெருந்தன்மைக்காக முக்தா சீனிவாசன் செய்த கைமாறை பாருங்கள். ஜெமினி கணேசன் அதற்கு முன் முக்தா சீனிவாசன் தயாரித்த பல திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.