எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களை ஓரங்கட்டிய தீபாவளி ரிலீஸ் திரைப்படம்.. என்ன படம் தெரியுமா?...

by சிவா |
sivaji
X

sivaji

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படம்என்றாலே அது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை புரியும். அதுவும் பண்டிகை நாட்களில் அவரது படங்கள் சக்கை போடு போடும். அப்படி 1971-ம் ஆண்டு அக்டோம்பர் 18-ம் தேதி தீபாவளி அன்று வெளிந்த படம்தான் நீரும் நெருப்பும்.

இப்படத்தை இயக்கியவர் ப.நீலகண்டன். தெளிவான திரைக்கதை எழுதி இயக்குவதில் வல்லவர் அவர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் நடித்திருப்பார். கதாநாயகியாக ஜெயலலிதா நடிக்க எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் இப்படம் உருவாகிருக்கும்.

neerum neruppum

அதேபோல், நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்புக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. அக்காலகட்டதில் எம்.ஜி.ஆருக்கு இணையான போட்டியினை கொண்டிருந்தவர். 1971-ம் ஆண்டு தீபாவளிக்கு எம்.ஜி.ஆர் படத்துக்கு போட்டியாக சிவாஜி நடிப்பில் வெளிந்த படம் ‘பாபு’. ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சௌகார் ஜானகி நடித்திருப்பார்.இப்படம் சிவாஜிக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

babu

அதுபோல் எம்.ஜி.ஆர் - சிவாஜி என இரு பெரிய ஹீரோக்கள் இருந்த போதே ஹிட் படங்களை கொடுத்தவர் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என அழைக்கப்படும் ஜெய் சங்கர். நடிப்பில் புதுமையை ஏற்டுத்தியவர். வழக்கமான பார்முலாவை மாற்றி அமைத்தவர். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் ஜெய்சங்கர் மற்றும் உஷா நந்தினி ஆகியோர் நடித்து அதே 1971-ம் ஆண்டு வெளிவந்த படம்தான் ‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’. இந்த படமும் 1971ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி ஹிட் அடித்தது.

veetukku

veetukku

இந்த படங்களும் 1971ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி ஹிட் அடித்தாலு. இந்த படங்களுக்க்கு போட்டியாக வெளியான இன்னொருபடம் இந்த மூன்று படங்களின் வசூலையும் தாண்டி வசூல் செய்த சம்பவம் நடந்தது. அந்த படம்தான் ‘ஆதிபராசக்தி’. கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் பக்தி படமாக வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

gemini

இப்படம் அக்காலகட்டத்தில் மற்ற 3 படங்களையும் பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை படைத்திருந்தது. இதிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்கள் கதாநாயகர்களை விட கதைக்குதான் முக்கியதுவம் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாரிசு Vs துணிவு : எத்தனை முறை அஜித்தும் விஜயும் மோதியுள்ளனர்?.. ரிசல்ட் என்ன?..

Next Story