அடங்காத அந்த நடிகர்...ஏ.வி.எம் நிறுவனம் செய்த காரியம்...பல வருடம் கழித்து கசிந்த ரகசியம்....
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் சேரர், சோழர், பாண்டியர்களாக இருந்தவர்கள் அந்த கால நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன் போன்றோர். மூவராக இருந்து அப்போதைய திரைத்துறையை ஆண்டு வந்தனர். நடிப்புக்கு சிவாஜி, வீரத்திற்கு எம்.ஜி.ஆர், காதலுக்கு ஜெமினி என்று அவரவர் குணாதிசயங்களில் ஜொலித்து வந்தனர்.
இதில் ஜெமினி கணேசன் மிகவும் சற்று வித்தியாசமானவர் தான். சினிமா வாழ்க்கையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி ஒரு பிளே பாயாகவே இருந்துள்ளார். இவரின் படங்கள் பெரும்பாலும் காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்படும் படங்களாகவே அமையும்.
இதையும் படிங்கள் : எம்.ஜி.ஆரின் மக்கள் பலத்தை அன்றே கணித்தவர் நடிகர் சோ…! காரணமாக இருந்தவர் கருணாநிதி….
மேலும் இவருக்கு 4 மனைவிகள். நடிகை சாவித்திரியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். மேலும் இவரும் சாவித்திரியும் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். நடிகர் ஜெமினி கணேசன் சூட்டிங்கிற்கு எப்பவுமே காரில் தான் வருவாராம்.
ஒரு சமயன் ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு காரில் அதி பயங்கரமாக வந்திருக்கிறார். எப்பவுமே காரில் வேகமாக தான் வருவாராம் ஸ்டுடியோவிற்கு. அதனாலயே ஏவிஎம் ஸ்டுடியோவில் ஜெமினிகணேசனுக்காக ஸ்பீடு பிரேக் வைத்தனர் என்ற தகவலை நடிகர் ராஜேஷ் தெரிவித்தார்.