ஒன்பது வேடங்களில் நடித்து விருது வாங்கிய நடிகர்... ஆனால் வசூலில் புஸ்ஸான பரிதாபம்...
தமிழ் சினிமாவில் ஒரு வேடத்திற்கு இருக்கும் வரவேற்பை விட பல வேடங்களில் நடிகர்கள் நடிக்கும் போது அவர்களுக்கு ரசிகர்கள் பெருவாரியான வரவேற்பை அள்ளி தருகிறார்கள். நடிகர் கமல் 10 வேடங்களில் தசாவதாரம் படத்தில் நடித்தார். ஏகப்பட்ட படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
60ஸ் காலத்திலும் இதுபோல பல வேடங்களில் நடிக்க நடிகர்கள் அதிகம் விரும்புவார்களாம். இயக்குனர் ஏபி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே இயக்குனரின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படம் நவரத்தினம். அவருக்கு 9 நாயகிகள் இப்படத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 9 வேடங்களில் ஜெமினி கணேசனும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் பெயர் நான் அவனில்லை. இப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்தார். இது தான் அவர் தயாரிப்பில் வெளிவந்த ஒரே படம். கே.பாலசந்தர் இயக்கிய இப்படம் 1974ம் திரைக்கு வந்தது. பிலிம்பேர் விருதினை இப்படத்திற்காக ஜெமினி கணேசன் பெற்றாலும் அப்படம் வசூலில் சுமார் ரகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.