யார வேணுனாலும் லவ் பண்ண ஜெமினிதான் கரெக்ட்!.. நமக்கு செட் ஆகாது.. சிவாஜி நடிக்காமல் விலகிய படம்..
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம், மக்கள் திலகம், காதல் மன்னன் என ஒரு நிலையான அடைமொழிகளோடு சுற்றியவர் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினிகணேசன். சரியான அடைமொழிகள் கொடுத்து ரசிகர்கள் இவர்களை மூவேந்தர்களாகவே பார்க்க ஆரம்பித்தனர். தமிழ் நாட்டை எப்படி சேரன், சோழன், பாண்டியன் என மூவேந்தர்கள் ஆண்டு வந்தார்களோ அதே போல் அந்தக் காலத்தில் சினிமாவை இவர்கள் மூவரும் ஆட்சி செய்து வந்தனர்.
மும்மூர்த்திகளாக வீரத்திற்கு எம்ஜிஆர், நடிப்பிற்கு சிவாஜி, காதலுக்கு ஜெமினி என கதை சார்ந்த படங்களுக்கு இவர்களை தான் இயக்குனர்கள் அணுகினார்கள். அந்த வகையில் காதல் மன்னன் என்ற பெயருக்கு ஏற்ப ஜெமினி காதல் படங்களில் அழகாக நடித்து அசத்தியிருப்பார்.
சொந்த வாழ்க்கையிலும் ஒரு காதல் மன்னனாகவே வாழ்ந்தார். இந்த நிலையில் கமலின் நடிப்பில் வெளியான முழு நகைச்சுவை படமான ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஜெமினியின் நடிப்பு மிகவும் ரசிக்கும் படியாக அமைந்திருந்தது. அதிலும் தன் காதல் லீலையை அழகாக வெளிக்காட்டியிருப்பார் ஜெமினி.
ஆனால் அந்தப் படத்தில் முதலில் ஜெமினிக்கு பதிலாக சிவாஜி தான் நடிக்க வேண்டியிருந்ததாம். ஆனால் அந்த நேரத்தில் சிவாஜிக்கு இதய சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்கா செல்ல இருந்ததால் அப்பாவால் நடிக்க இயலாது என சிவாஜியின் மூத்த மகனான ராம்குமார் கூறிவிட்டாராம்.
இதைக் கேள்விப்பட்ட கமல் சிவாஜியிடம் போன் மூலம் ‘என்னப்பா நடிக்க முடியாதா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு சிவாஜி ‘ஆமாடா, இவங்க சிகிச்சைக்காக அமெரிக்கா கூட்டிக்கொண்டு போறாங்களாம், என்னமோ, சரி அந்தப் படத்தில் யார வேணுனாலும் லவ் பண்ணலாம் என்ற கேரக்டர்தானே? அதுக்கு ஜெமினிதான் சரியான ஆளு’
என்று சிவாஜி சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்னதின் பேரில் தான் அவ்வை சண்முகி படத்தில் ஜெமினி நடிக்க வந்தாராம். இது கே.எஸ்.ரவிக்குமாருக்கே கமல் சொல்லப் போய்தான் தெரியுமாம். இதை ஒரு பேட்டியில் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.
இதையும் படிங்க : கண்ணதாசனுக்கு இப்படிஒரு காதல் கதையா?.. காதலியை நினைத்து உருகி எழுதிய பாடல் எதுனு தெரியுமா?..