More
Categories: Cinema History Cinema News latest news

வரலாறு போற்றும் கதாபாத்திரம்!.. சிவாஜிக்காக விட்டுக் கொடுத்த ஜெமினிகணேசன்!.. ஏன்னு தெரியுமா?..

யாரும் எந்த நடிகரும் நடிக்க பயந்த திரைப்படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தில் கர்ணனாகவே வாழ்ந்திருப்பார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். துரியோதனுக்கும் கர்ணனுக்கும் இடையே இருக்கும்  நட்பு ஒருபக்கம், துரியோதனின் சூழ்ச்சி ஒருபக்கம், அவருடன் சேர்ந்து நட்புறவை வளர்க்கும் கர்ணன் கதாபாத்திரம் , ஆகவே பல மொழிகளில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் தயங்கினார்கள்.

ஆனால் சிவாஜி கணேசன் மட்டும் அந்த கதாபாத்திரத்தில் இருக்கும் உண்மைத் தன்மையை மக்களுக்கு புரியும் விதத்தில் நடித்தால் கண்டிப்பாக ஏற்பார்கள் என்று மிகவும் துணிந்து நடித்தார். அப்பவே 40 லட்சம் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட படம் கர்ணன். இப்போதைய மதிப்பு 500 கோடி. இந்தப் படத்தை பத்மினி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது.

Advertising
Advertising

sivaji1

இந்தப் படத்தில் கர்ணனுக்கு இணையான கதாபாத்திரம் கிருஷ்ணன். இந்த கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் என்.டி.ராமாராவ் நடித்திருந்தார். ராமர் , கிருஷ்ணருக்காகவே பிறந்தவர் போல அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பார்.

ஆனால் முதலில் கிருஷ்ணன் கதாபாத்திரத்திற்கு நடிக்க வந்தவர் ஜெமினி கணேசனாம். சிவாஜியின் வேண்டுகோளுக்கிணங்க ஜெமினி இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். கிருஷ்ணன் கதாபாத்திரத்திற்கு ராமாராவ் நடித்தால் நன்றாக இருக்கும் என சிவாஜி ஒத்தக் காலில் நின்றாராம்.

ramarao

ஒரு சமயத்தில் ராமாராவும் நடிக்க மறுத்திருக்கிறார். ஆனால் சிவாஜியின் விடாப்பிடியால் “கர்ணன்” படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தாராம் ராமராவ். இந்தப் படத்தில் சிவாஜிக்கு இணையாக ராமாராவின் காட்சியும் எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சிவாஜிக்கு இணையாக ராமாராவ் காட்சியும் வந்து நிற்கும். படம் வெளியாகி வெள்ளித்திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்றது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 58 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

இதையும் படிங்க : தமிழ் உச்சரிப்பு சரியாக பேசக்கூடிய நடிகை!.. கலைஞரே பாராட்டிய அந்த நடிகை யார் தெரியுமா?..

Published by
Rohini

Recent Posts