Cinema History
பாலச்சந்தரையே ரிஜெக்ட் பண்ண ஜெமினி கணேசன்!.. அப்புறம் நடந்ததுதான் பெரிய டிவிஸ்ட்!..
தமிழ்த்திரை உலக நடிகர்களில் காதல் மன்னனாகப் போற்றப்பட்டவர் ஜெமினிகணேசன். நடிப்பதற்கு முன் ஜெமினிகணேசன் எப்படி இருந்தார் என்று பார்ப்போம்.
ஜெமினிகணேசன் சிறுவயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் படித்துக் கொண்டு இருந்தார். அப்போது அதை அறிந்து கொண்டார் அலமேலுவின் தந்தை.
தன் மகளை திருமணம் செய்தால் டாக்டர் சீட்டு வாங்கித் தருகிறேன் என்றார். அதற்கு சம்மதித்தார் ஜெமினிகணேசன். ஆனால் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் ஜெமினி கணேசனின் மாமனார் இறந்து போனார். அவரது டாக்டர் கனவும் தகர்ந்தது. அதன்பிறகு தான் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார்.
ஆரம்பத்தில் ஜெமினிகணேசனுக்கு புது முக நடிகர்களை நேர்காணல் செய்து ஜெமினி ஸ்டூடியோவுக்கு அனுப்புவது தான் அவரது வேலை. அப்படி ஒரு சமயம் அவரிடம் வாய்ப்பு கேட்டு வந்தவர் தான் நடிகர் திலகம். அவரும் ஜெமினி முன் நடித்துக் காட்டி வாய்ப்பைப் பெற்றார்.
மிஸ்ஸியம்மா படத்தில் ஜெமினி கணேசன் சாவித்திரியுடன் இணைந்து நடித்தார். இருவருக்கும் இடையே நல்லா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. உடனே காதல் மலர்ந்து விட்டது. இருவரும் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.
அது பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஒரு தடவை லக்ஸ் சோப் விளம்பரத்தில் சாவித்திரி நடித்தார். அப்போது கையெழுத்து போட வேண்டியிருந்தது. அப்போது சாவித்திரி கணேசன் என போட்டுள்ளார். அதன் பிறகு தான் இருவருக்கும் கல்யாணம் நடந்ததே வெளி உலகுக்குத் தெரியவந்தது.
அதே போல ஜெமினிகணேசனைப் பற்றி இன்னொரு சுவாரசியமும் உண்டு. தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர் பாலசந்தர். இவர் ஒருமுறை கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடி அலைந்தார். ஜெமினி ஸ்டூடியோவுக்கு கடிதம் எழுதினார். ஒரு வாரம் கழித்து ஒரு பதில் வந்தது. உங்களுக்கு ஏற்றாற்போல் வேலை எதுவுமில்லை என்று குறிப்பிட்டு இப்படிக்கு ஆர்.கணேசன் என கையெழுத்தும் போட்டிருந்தார்கள்.
அதன்பிறகு தான் அது யார் என்று பார்த்தால் ஜெமினிகணேசன் என்று தெரியவந்தது. வேலை யாருக்கு இல்லைன்னு சொன்னாரோ அவரது இயக்கத்திலேயே பிற்காலத்தில் பல படங்களில் நடித்தார் ஜெமினிகணேசன்.