Gethu Dinesh: போடு.. உண்மையிலேயே கெத்துதான்பா! தினேஷின் அடுத்த பட ஹீரோயின் யார் தெரியுமா?

dinehs
Gethu Dinesh: அட்டகத்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் தினேஷ். தனது எதார்த்தமான நடிப்பால் முதல் படத்திலேயே ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார் தினேஷ். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த மார்கெட் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் நடிப்பில் மிகவும் பேர் போனவர் தினேஷ். ரஜினியின் கபாலி படத்தில் கூட ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார்.
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு சரியான கம்பேக் கொடுத்தார் தினேஷ். கெத்து படத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகராக அந்தப் படத்தில் அதுவும் ஹரீஸ் கல்யாணுக்கு மாமனராக நடித்திருப்பார். கெத்து என்ற கதாபாத்திரத்தில்தான் நடித்தார். அந்தப் படத்தில் அவருடைய ஓப்பனிங் அவருடைய நடிப்பு என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள். அந்தப் படத்திற்கு பிறகு பெரிய அளவில் டிரெண்டானார் தினேஷ்.
அட்டகத்தி தினேஷ் என்ற பெயர் மறந்து கெத்து தினேஷ் என மாறினார். தொடர்ந்து அவரை தேடி பல பட வாய்ப்புகள் வந்தன. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் இந்நேரம் எத்தனையோ படங்களில் நடித்திருப்பார். ஆனால் அது அவருடைய எண்ணம் இல்லை. ஒரு படத்தில் நடித்தாலும் அந்த கேரக்டர் காலந்தோறும் நின்று பேசப்பட வேண்டும் என விரும்புவார் தினேஷ்.

அவருடைய சினிமா கிராஃபை எடுத்துக் கொண்டால் அந்த வகையில்தான் அமைந்திருக்கும். அதனால்தான் இன்று வரை அவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறார்கள். கெத்து தினேஷ் என்று சொன்னாலே அனைவரும் ஆர்வத்துடன் திரும்பி பார்க்கின்றனர். இந்த நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகி அந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.
படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கியிருக்கிறார்களாம். அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்களாம். இந்த நிலையில் படத்தின் ஹீரோயின் பற்றி தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஹீரோயினாக நாக சைதன்யாவின் மனைவியும் நடிகையுமான சோபிதா துலிபாலாதான் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தினேஷுக்கு ஜோடியா அல்லது படத்தின் கதையின் நாயகியாக நடிக்கிறாரா என்று தெரியவில்லை.