கஜினி படத்தை மிஸ் செய்த பிரபல ஹீரோக்கள்... கல்பனா கேரக்டருக்கே நோ சொன்ன நடிகை…
Ghajini: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி திரைப்படத்தில் நடிக்க இருந்தது முதலில் சூர்யா இல்லையாம். கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் பலர் இப்படத்தினை மறுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
2005ம் ஆண்டு சூர்யா மற்றும் அசின் நடிப்பில் வெளியான திரைப்படம் கஜினி. சேலம் சந்திரசேகரன் தயாரித்த இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை குவித்தது. இப்படம் முதலில் 2004ம் ஆண்டு மிரட்டல் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கமலின் மருதநாயகம் கனவு நிறைவேறுகிறதா? புதிய தொழில்நுட்பம் கைகொடுக்குமா?
முதலில் இப்படத்தின் கதையை அஜித் கேட்ட உடனே தான் இந்த படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்து கொள்கிறேன் எனக் கூறினாராம். அது சூப்பரா இருக்கும் என நினைத்த ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய ஹீரோ சஞ்சய் ராமசாமிக்கு இதையே ஓகே செய்து விடுகிறார். அஜித் மற்றும் ஜோதிகா நடிக்கலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் ஜோதிகா கால்ஷீட் பிரச்னையால் அந்த படத்தினை தவறவிட அசின் படத்தில் இணைந்தார்.
ஆனால் இதே சமயத்தில் தான் அஜித் நான் கடவுள் படத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது. அப்படத்துக்கு நீள முடி இப்படத்துக்கு மொட்டை என இரண்டு கெட்டப்பும் படத்தில் நிறைய குளறுபடிகளை கொடுக்கும் என்பதால் அஜித்தால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. பின்னர் சில நாட்கள் கழித்து அந்த படம் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து சஞ்சய் ராமசாமியாக மாதவனிடம் கேட்டு இருக்கிறார் முருகதாஸ்.
இதையும் படிங்க: மீனாவிடம் சிக்கிய ரோகிணி.. குழம்பி நிற்கும் கோபி… தங்கமயில் செய்த பெரிய விஷயம்..
13வது நடிகராக நடிக்க வந்த சூர்யா தான் இப்படத்தினை ஓகே செய்து இருக்கிறார். பின்னர் தான் இப்படம் உருவானது. அசின் கேரக்டருக்கு கல்பனா என்ற பெயரை வைத்ததற்கு கல்பனா சாவ்லா தான் காரணமாம். இதுமட்டுமல்லாமல் புகழ்பெற்ற ஆடை ஏற்றுமதியாளர் தாகூர் பக்ஷானி கேரக்டரை வைத்து சஞ்சய் ராமசாமி கேரக்டர் உருவானது குறிப்பிடத்தக்கது.