முதல் தமிழ் சினிமா ஹீரோ!.. ரஜினி படம் செய்யாத சாதனை!.. கில்லி படம் உருவான கதை!..

Published on: April 25, 2024
gilli
---Advertisement---

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக எப்போதும் இருப்பவர் நடிகர் ரஜினிதான். எம்.ஜி.ஆர் படங்களுக்கு பின் ரஜினி படங்கள்தான் அதிக வசூலை பெற்றது. ரஜினியின் படங்கள் வெளியானாலே தியேட்டர்களில் திருவிழா போல கூட்டம் கூடியது. தனது திரைவாழ்வில் பல 100 நாள், 125 நாள், 150 நாள், 175 நாட்கள் என பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு கூட ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை பெற்று 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. வசூல் மன்னன் ரஜினியாக இருந்தாலும் கடந்த சில வருடங்களாக விஜயின் படங்கள் அதிக வசூலை பெற்று வருவதை மறுக்க முடியாது.

இதையும் படிங்க: கமலின் அந்த ஹிட் பாட்டு தான் கில்லி ஷா லா லா… உண்மையை சொன்ன கபிலன்!…

அதோடு, விஜயின் சம்பளம் ரஜினியின் சம்பளத்தை விட அதிகரித்திருக்கிறது. தற்போது ரீ ரிலீஸ் ஆகியிருக்கும் கில்லி படம் 17 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதுவரைக்கும் எந்த ஹீரோவின் ரீ-ரிலீஸ் படமும் இந்த அளவுக்கு வசூலை பெற்றது கிடையாது.

gilli

உண்மையில் கில்லி படத்தில் விக்ரமை நடிக்க வைக்கவே ஆசைப்பட்டார் தரணி. தூள் பட கதையை விஜயை வைத்து எழுதி இருந்தார். ஆனால், கால்ஷீட் கொடுக்க முடியாமல் விஜய் தூள் படத்தில் நடிக்கவில்லை. விக்ரம் நடித்து அப்படம் ஹிட் அடிக்கவே, தரணியை அழைத்து ‘உடனே ஒரு படம் ஸ்டார்ட் பண்ணுங்க’ என சொல்லி விஜய் நடித்த படம்தான் கில்லி.

இதையும் படிங்க: மூன்று கெட்டப்புகளில் நடித்தும் மூட் அவுட் பண்ணாத 5 நடிகர்கள்!… மூன்று முகத்தில் கலக்கிய ரஜினி!..

விஜய்க்கு முன் ரஜினி படங்கள் வசூலை குவித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு திரைப்படம் ரூ.50 கோடி வசூலை தொட்டது இந்த படம்தான். இந்த படத்திற்கு பின்னர்தான் விஜயை வசூல் மன்னனாக தயாரிப்பாளர்களும், தியேட்டர் அதிபர்களும் பார்க்க துவங்கினார்கள்.

இப்போது வரை அதை நிரூபித்து வருகிறார் விஜய். இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் வசூலில் சக்கை போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.