சினிமா பிரபலங்களை தூரத்திலிருந்து சந்தித்தாலே ரசிகர்களுக்கு குதூகலம் ஆகிவிடும். இந்நிலையில் நடிகர் விஜய்யை அருகில் சென்று சந்தித்தது மட்டுமின்றி அவரிடம் விருது வாங்கியும் அவருடன் விளையாடியும் மாணவர்களும் மாணவிகளும் இன்று தங்கள் ஆசையை தீர்த்துக் கொண்டனர்.
மாணவிகளின் தோளில் கை போட்டு நடிகர் விஜய் எப்படி போஸ் கொடுக்கலாம் என விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், பல மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் நடிகர் விஜய் கையை எடுத்து அவர்களது தோளின் மீது போட்டுக் கொண்டு போஸ் கொடுத்தனர்.
இதையும் படிங்க: வேறு வழியில்லாமல் நிக்கோலை கரம்பிடிக்கும் வரலட்சுமி! பின்னணி காரணம் என்ன தெரியுமா?
ஒரு சில மாணவிகள் ரோஸ் கொடுக்க முட்டி போட்டு நடிகர் விஜய் வாங்கிய காட்சிகளும் வெளியாகின. குழந்தைகளை தூக்கி கொஞ்சுவதும் முத்தம் கொடுப்பதும் அவர்கள் எடுத்து வந்த பலூனை தூக்கிப்போட்டு விளையாடுவதும் என இன்று நடைபெற்ற கல்வி விருது விழாவில் ஏகப்பட்ட சுவாரசியத் தருணங்கள் களைகட்டின.
தளபதி விஜய் இவ்வளவு எளிமையானவராக எளிதில் பழகக் கூடியவராகவும் இருப்பார் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என பல பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கூறியுள்ளனர். தமிழக வெற்றி கழக தலைவராக விஜய் மாறிய நிலையில் இரண்டாம் கட்டமாக என்று நடைபெற்ற கல்வி விருது விழாவில் பங்கேற்றார். சுமார் 700 மாணவர்களுக்கு பரிசுகளை இன்று வழங்கினார்.
இதையும் படிங்க: பாலாவுக்குக் கொடுத்த கடனை திருப்பி கேட்காத சூர்யா… பிரபலம் சொல்லும் பின்னணி தகவல்
நீட் தேர்வு குறித்து விஜய் பேசியது இந்திய அளவில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்கள் முதல் தேசிய ஊடகங்கள் வரை விஜயின் நீட் குறித்த பேச்சுக்களை செய்திகளாக வெளியிட்டன.
அதன் பின்னர் பரிசு கொடுக்கும் போது குழந்தைகளுடனும் மாணவர்களுடனும் மாணவர்களின் பெற்றோர்கள் உடனும் நடிகர் விஜய் பழகியதை பார்த்த ரசிகர்கள் விக்ரமன் சார் படமே தோற்றுவிடும் அந்த அளவுக்கு விஜய் அண்ணா அனைவரது இதயங்களையும் பிடித்துவிட்டார். இந்த அளவுக்கு எளிமையான ஒரு தலைவர் தமிழ்நாட்டுக்கு எந்த காலத்திலும் நிச்சயம் கிடைக்க மாட்டார் என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘தல’யோட வார்த்தைக்காகத்தான் வெயிட்டிங்! புது குண்டா தூக்கிப் போட்ட எச்.வினோத்
VijayTv: விஜய்…
விஜய் 69…
சினிமாவிலும் சரி…
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…