சுயசரிதையை சினிமாவாக எடுக்கும் கவர்ச்சி நாயகி...... எத்தன பெரிய புள்ளி சிக்க போகுதோ...
தமிழ் சினிமாவில் சுயசரிதையை படமாக்கும் நிகழ்வு அடிக்கடி நிகழும். ஆனால் இந்த முறை ஒரு கவர்ச்சி நாயகி தன் வாழ்க்கையினை தானே படமாக இயக்கி தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் மூலம் சினிமாவிற்கு நுழைந்தவர் நடிகை சோனா. தொடர்ந்து, 2002ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியாவாக வெற்றி பெற்றார். தொடர்ச்சியாக அவருக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் வந்தது. இருந்தும், அவரின் கவர்ச்சி நடனங்கள் மூலமே அதிகம் அறியப்பட்டார்.
இந்நிலையில், நடிகை சோனா எனது வாழ்க்கையினை படமாகவோ, வெப் சீரிஸாகவோ தயாரித்து இயக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். அதுகுறித்து கூறி இருக்கும் சோனா, எனக்கு கல்யாணம் செய்துக்கொள்ள ஆசை. ஆனால் அது நடக்காது. நடக்காது என்றும் தெரிந்து விட்டது. என்னென்னவோ முயற்சி செஞ்சு பார்த்துட்டேன். இதை போன்ற என் வாழ்க்கையில் நிறைய விஷயம் நடக்காமல் இருக்கிறது.
பிரபலங்களின் வெளி வாழ்க்கை தான் பலருக்கு தெரிகிறது. அவர்களின் கஷ்டம் புரிவது இல்லை. அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கணும். அதுக்காவே எனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி இருக்கிறேன். விரைவில் அதனை வெப் சீரிஸாகவோ, படமாகவோ நானே தயாரித்து இயக்க போகிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இவரின் இப்படத்தால் மீண்டும் கோலிவுட்டில் எதுவும் சர்ச்சை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இதையும் படிங்க: ஏழு வருஷமா இந்த கொடுமையை அனுபவிச்சேன்!..கிளாமர் நடிகை ஓப்பன் டாக்!..