அந்த கட்சியில சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படுறேன்! - அரசியலில் குதிக்கும் ஷகீலா
ஷகீலா என்றாலே மலையாளப்பட நடிகை. கவர்ச்சியான அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் மட்டும் நடிக்கக்கூடியவர் என்பது தான் பெரும்பாலானோருக்குத் தெரியும். அதையும் தாண்டி அவர் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்க்கப்போனால் நிறைய ஆச்சரியங்கள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
6 மொழிகளில் 250 படங்களுக்கும் மேல் நடித்துப் புகழ் பெற்றவர். சில்க் ஸ்மிதாவுக்குப் பிறகு பல சர்ச்சைகளில் சிக்கியவர். எல்லாவற்றையும் கடந்து இன்றும் சினிமாவில் நிலைத்து நிற்கிறார்.
இவரோடு பேவரைட் பெயர் சேச்சி. முழுப்பெயர் ஷகிலா பேகம். நவம்பர் 20, 1975 எண்ணூரில் பிறந்தார். அப்பா ஜான் பாட்ஷா. இவர் ஒரு கூலித்தொழிலாளி. அம்மா ஜான் பேகம். இவருடன் சேர்த்து இவர்கள் வீட்டில் மொத்தம் 13 பேர் உள்ளனர். ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒருவேளை சாப்பாடு கூட ஒரு நாளைக்கு கிடைப்பதில்லை.
அந்த சமயத்தில் தான் இவர் தனது படிப்பையும் நிறுத்தி விட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. இவங்க வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கும்போது இவங்களோட உடம்பப்பார்த்தும், முகத்தைப் பார்த்தும் நீ படத்தில எல்லாம் நடிச்சா நல்லா இருக்கும். அப்படின்னு நிறைய பேர் சொன்னாங்க. தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன்.
1995ல பிளே கேர்ள்ஸ்ங்கற படத்துல சில்க் ஸ்மிதா கூட சேர்ந்து நடித்தார் ஷகிலா. 2000த்தில் ஒரு கன்னட படத்திலும், 2001ல் ஒரு மலையாளப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே ஹிட். அந்த ஆண்டு மட்டு மலையாளத்தில் மொத்தம் 20 படங்கள் நடித்துள்ளார். மலையாளத் திரை உலகை கலக்கி வந்தவருக்கு 2002ல் தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தது.
அங்கு சீரியசான ரோலில் நடித்தார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் கிளாமரான ரோல் உடையவை தான். என்றாலும் தமிழில் மீண்டும் களமிறங்க 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த சமயத்தில் தமிழ்ப்படங்களில் கிளாமரான ரோல் நடிக்க நீங்க மட்டும் தான் இருக்கீங்கன்னு நிறைய பேர் சொன்னாங்க.
ஆனா...எனக்கு வயசாயிட்டு...இனி இந்த மாதிரி ரோல் பண்ண மாட்டேன் என ஷகிலா மறுத்து விட்டார். இதனாலேயே இவருக்கு பல பட வாய்ப்புகள் வராமல் போய்விட்டன. அந்த சமயத்தில் தான் தேஜா என்பவரின் மூலம் ஜெயம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து குரு சிஷ்யன், மாஞ்சாவேலு, எஸ்எம்எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். 2016ல் சகலகலா வல்லவன் படத்தில் நடித்தார்.
இதுவரை இவர் நடித்த 250க்கும் மேற்பட்ட படங்களில் 100 படங்கள் மலையாளப்படங்கள் தான். அவற்றில் 40 படங்கள் வயது வந்தோருக்கானவை. அந்தப்படங்கள் மூலமாகத்தான் மலையாளத்தில் இவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். அதனால் தான் இவரை செல்லமாக அங்கு சேச்சி என்று அழைக்கின்றனர்.
2017ல் இவரைப் பற்றி ஒரு சர்ச்சை எழுந்தது. இவரை விட சின்ன பையனான 28 வயதுள்ளவரை இவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சர்ச்சை எழுந்தது. இவரிடம் அதுபற்றி கேள்வி எழுப்பும்போது அவர் எனக்குத் தம்பி.
தெலுங்கு படத்தில் என்னுடன் இணைந்து நடித்தவர் என்றார். ஷகிலா என்றால் ஏமாளி என்று பொருள். என்னை நிறைய பேர் ஏமாற்றிருக்காங்க. அதுல என் சகோதரி ஏமாற்றியது தான் என்னால மறக்க முடியாதது.
எனக்கு நிறைய லைப் லைனர்ஸ் கிடைச்சாங்க...3 முறை மேரேஜ்க்காக புரோபோஸ் பண்ணாங்க. நான் யாரையும் மேரேஜ் பண்ணிக்கல. என்னோட கேரியரை மட்டும் தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். நான் நடிக்கிற ஒரு சில கேரக்டரை வச்சி என்னைத் தவறாக சித்தரிக்கக் கூடாது.
என்னைத் தப்பா அப்ரோச் பண்ண எல்லாருமே நான் நடந்து போனா எழுந்து நிப்பாங்க. ஒரு பொண்ணோட உடம்பை மட்டுமே பார்த்து முடிவு பண்ற கேரக்டருக்கு மத்தியில ஒரு லெஜண்டரி ஆர்டிஸ்டா இருந்தவங்க தான் சில்க் ஸ்மிதா. என் வாழ்க்கையே படமாக வந்துள்ளது எனக்கு கிடைச்ச பெருமை. எனக்கு மேரேஜாகல. எனக்கு குழந்தை கிடையாது.
தம்பி மட்டும் தான் இருக்கான். இதுக்கு அப்புறம் நான் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. என்கிட்ட இருக்கற பணத்தை வச்சி நான் எல்லோருக்குமே உதவி செய்றேன். எங்க அண்ணன் கமல்ஹாசனோட கட்சியில இணைஞ்சி மக்களுக்காக நான் நிறைய செய்யணும்னு ஆசைப்படுறேன்.
நான் ஒரு பொறுப்புக்கு வந்தேன்னா குழந்தைகள் மேல் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுறவர்களுக்கு ஒரு சட்டத்தை இயற்றுவேன். அவர்கள் உயிரோடு இருக்கணும். ஆனா மறக்க முடியாத அளவுக்கு தண்டனையை அனுபவிக்கணும் என்கிறார் உறுதியாக சேச்சி ஷகிலா.
நான் கமலின் தீவிர ரசிகை. கமல் கட்சியில் சேர ஆர்வமாக இருக்கிறேன் என 2019ல் ஷகிலா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.