கொல மாஸ்... வெறித்தனமா வெளியான "வலிமை" Glimpses வீடியோ!
வெயிட் பணத்துக்கு ஒர்த்தான படமாக அமையப்போகும் வலிமை!
நடிகர் அஜித் எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகும் இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஹீமாகுரோஷி நடிக்கிறார். போனி கபூரின் மகள் ஜான்வி கபூரும் இப்படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடிக்கிறார்.
அஜித் ரசிகர்களின் பெரும் எதிப்பரப்பாக உருவாகியுள்ள இப்படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகிறது என தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். இதனால் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கும் அஜித் ரசிகர்ளுக்கு சற்றுமுன் செம சர்ப்ரைஸ் ஆக வலிமை படத்தின் Glimpses வீடியோ யூடியூபில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.
பைக் ரேஸராக அஜித்துடன் மோதும் வில்லன் என்ன கதி ஆகப்போறாறோ ... மாஸான டயலாக், வெறித்தனமா fire காட்சிகள், பைக்கில் பறந்து ஸ்டண்ட் செய்யும் அஜித் என இந்த வீடியோ தல ரசிகர்ளுக்கு திகட்ட திகட்ட விருந்து கொடுத்தார் போன்று அமைந்துள்ளது. வெளியான சில நிமிடத்திலே 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms