Connect with us

250 கோடி கடன்!.. மீண்டும் கடனாளியான ஞானவேல் ராஜா!.. அமீரை பேசிய கர்மா!….

gnanavel raja

latest news

250 கோடி கடன்!.. மீண்டும் கடனாளியான ஞானவேல் ராஜா!.. அமீரை பேசிய கர்மா!….

நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஞானவேல் ராஜா.. அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்திவீரன் படமே இவரின் முதல் தயாரிப்பு. ஆனால், அந்த படம் பட்ஜெட்டை தாண்டி சென்றதால் ‘இனிமேல் நான் படத்திற்கு செலவு செய்ய மாட்டேன்.. நீங்களே படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என சொல்லி அமீரிடம் படத்தை கொடுத்துவிட்டார் ஞானவேல் ராஜா.

எனவே, நண்பர்களிடம் கடன் வாங்கி அமீர் அந்த படத்தை எடுத்து முடித்தார்.. படத்தை பார்த்து விட்டு ‘படத்தை எனக்கே எழுதி கொடுத்து விடுங்கள்.. நீங்கள் செலவு செய்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன்’ என தயாரிப்பாளர் சங்கம் மூலம் அமீரை கூப்பிட்டு பேசி படத்தை எழுதி வாங்கிக்கொண்டார் ஞானவேல் ராஜா. படம் லாபம் என்றாலும் அமீர் செலவு செய்த 2 கோடியை ஞானவேல் ராஜா திருப்பி தரவில்லை.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு அமீர் பலமுறை அலைந்தும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பு கூட இந்த விஷயம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.. அப்போது அமீரை திருடன், மோசடி பேர்வழி என்றெல்லாம் விமர்சித்து பாரதிராஜா போன்ற இயக்குனர்களின் எதிர்ப்புக்கு ஆளானார் ஞானவேல் ராஜா. மேலும், சூர்யாவை வைத்து அதிக பட்ஜெட்டில் ஞானவேல் ராஜா தயாரித்த கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவியது..

இந்த படத்தின் புரோமோஷன் விழாவில் பயங்கர பில்டப் கொடுத்தார் ஞானவேல் ராஜா. படம் 2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என்றார். ஆனால் படமோ 100 கோடி கூட வசூல் செய்யவில்லை. இந்த படத்தின் மூலம் 200 கோடி கடனாளியானார் ஞானவேல் ராஜா. அதன் பின் சூர்யாவின் முயற்சியில் அந்த கடன்களை அடைத்துவிட்டதாக செய்திகள் வெளியானது. எனக்கு இப்போது கடனே இல்லை என அறிவித்தார் ஞானவேல் ராஜா.

இந்நிலையில், கார்த்தியை வைத்து அவர் தயாரித்த வா வாத்தியார் திரைப்படம் மூலம் மீண்டும் கடனாளியாகியிருக்கிறார் ஞானவேல் ராஜா. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் படு தோல்வி. எனவே, இந்த படத்தை வாங்கி வெளியிட்ட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா வினியோகஸ்தர்களுக்கு பல கோடி நஷ்டம். எனவே 50 கோடி வரை திருப்பி தர வேண்டிய நிலையில் இருக்கிறார் ஞானவேல் ராஜா. தமிழ்நாடு வினியோகஸ்தருக்கு கொடுக்க வேண்டிய 10 கோடிக்காக சென்னையில் உள்ள தனக்கு சொந்தமான தியேட்டரை அவருக்கு எழுதி கொடுத்து விட்டாராம் ஞானவேல் ராஜா..

அமீருக்கு 2 கோடியை திருப்பி தராததோடு, அவரை ஃபிராட் என திட்டிய ஞானவேல் ராஜா 250 கோடி கடனாளியாகி இனிமேல் சினிமாவே எடுக்க முடியாத நிலைக்கு போய்விட்டார். இதுதான் ‘கர்மா’ என சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

To Top