latest news
Kanguva: ஞானவேல் ராஜாவை காலி செய்த கங்குவா!.. திருப்பி கொடுக்க வேண்டியது இவ்வளவு கோடியா?!…
Kanguva: அதிக பட்ஜெட்டுகளில் படம் எடுக்கும் போது அந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வசூலை பெற்றுவிட்டால் தப்பிவிடும். இல்லையேல் அப்படத்தை தயாரித்த் தயாரிப்பாளருக்கு பெரும் கடனில் முடிந்துவிடும். தற்போது அதிக பட்ஜெட் படங்கள் பேன் இண்டிய படம் என்கிற பெயரில் வெளியாகிறது.
அதாவது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் அதிக தியேட்டர்களில் வெளியிடுவார்கள். அப்படி செய்து வசூலை அள்ளினால் மட்டுமே லாபத்தை பெற முடியும் என்கிற நிலையில் பெரிய பட்ஜெட் படங்கள் இருக்கிறது.
இதையும் படிங்க: கொஞ்சமா நடிங்க?!.. பழைய மெசேஜால் மாட்டிகிட்ட பிரதீப்!.. அவங்க கண்ணுலப்பட்டா என்ன ஆகுறது!..
பாகுபலி, பாகுபலி 2, கேஜிஎப், புஷ்பா, கேஜிஎப் 2, காந்தாரா, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் அப்படித்தான் பேன் இண்டியா படங்களாக வெளியாகி வசூலை அள்ளியது. அதே வழியில் வெளியான திரைப்படம்தான் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த திரைப்படம் இது.
சரித்திர கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது. தமிழில் ஒரு புதிய முயற்சி என்றாலும் கதை, திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டதால் இப்படம் ரசிகர்களை கவராமல் போய் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. படத்தை எல்லோரும் கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்த தயாரிப்பாளருக்கு வெளிவந்த ரிசல்ட் அதிர்ச்சியையே கொடுத்தது.
சூர்யாவின் மீது கோபத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் மற்றும் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் இதை பயன்படுத்தி கங்குவா படத்தின் மீது வன்மத்தை காக்கினார்கள். படம் ரிலீஸான முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் சொன்ன நெகட்டிவ் கமெண்ட் படத்தின் வசூலை கடுமையாக பாதித்தது.
இந்நிலையில், உலகமெங்கும் இப்படத்தை நேரிடையாகவே ஞானவேல் ராஜா வெளியிட்டிருந்தார். அந்த வகையில் சுமார் 100 கோடி வரை அவர் திருப்பி கொடுக்க வேண்டியிருக்கும் என சொல்லப்படுகிறது. கங்குவா 2 ஆயிரம் கோடி வரை வசூல் செய்யும் என சொன்னவருக்கு காசை திருப்பி கொடுக்க வேண்டிய நிலை வந்தது உண்மையிலேயே கஷ்டம்தான்.