இது என்னப்பா புதுப்பிரச்சினையா இருக்கு?.. எந்த வம்புக்கு போகாத மனுஷன்.. மாட்டிக் கொண்டு முழிக்கும் எஸ்.ஜே.சூர்யா..
தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. சினிமாவில் ஒரு ஆழமான அடித்தளத்தை போட்டவர். வாலி,குஷி என இரு பெரும் உச்ச நட்சத்திரங்களின் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியவர் ஏஸ்.ஜே.சூர்யா.
அந்த இரு படங்களின் வெற்றியே அவரின் சாதனையை காலங்காலமாக பேசும். அந்த அளவுக்கு விஜய், அஜித்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்த படமாக அவ்விரு படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா.
அதனை தொடர்ந்து பல படங்களை இயக்கி நடித்தாலும் அது சரி வர போகாததால் நடிப்பின் மீது கவனத்தை திருப்பினார். அதுவும் வில்லனாக அவதரித்து அனைவரையும் மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா அதிலிருந்து ஒரு ஹைப்பில் இருக்கும் நடிகராகவே மாறியிருக்கிறார்.மேலும் இதுவரை தமிழ் சினிமாவில் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் குறை சொல்லாத ஒரு நல்ல மனிதர்.
இந்த நிலையில் இவருக்கு இப்போது ரெட் கார்டு கொடுத்து அறிவித்திருக்கிறது கவுன்சில். அதாவது ஒரு சமயம் ஞானவேல் ராஜாவுக்கு படம் பண்ணி தருவதாக எஸ்.ஜே.சூர்யா அட்வான்ஸ் வாங்கியிருந்தாராம். ஆனால் ஏதோ சில பல காரணங்களால் அந்த ப்ராஜெக்ட் அப்படியே நின்று போனதாம்.
உடனே எஸ்.ஜே.சூர்யாவும் வாங்கிய அட்வான்ஸை திருப்பி தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் ஞானவேல் ராஜா ‘இல்ல வேண்டாம் அப்படியே இருக்கட்டும், ஒரு நாள் நாம சேர்ந்து படம் பண்ணலாம்’ என்று சொல்லியிருக்கிறார். இப்போது அந்த வாய்ப்பு வர எஸ்.ஜே.சூர்யாவின் மார்கெட்டும் அதிகரித்து விட்டதால் தனக்கு சம்பளமாக ஒரு பெரும் தொகையை கேட்டாராம் சூர்யா.
ஆனால் அப்ப பேசின பட் தான் சம்பளம் என்று சொல்லியிருக்கிறார் ஞானவேல்ராஜா. இதற்கு சரிவராத சூர்யா அன்று வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க ‘எனக்கு வட்டியோடு தான் வேண்டும்’ என்று நிற்கிறாராம் ஞானவேல்ராஜா. ஆனால் இதற்கு சூர்யா உடன்படாத நிலையில் அவருக்கு ரெட் கார்டு போட்டு நிறுத்தி வைத்துள்ளதாம்.
இதையும் படிங்க : இப்படி பண்ணுவாங்கனு எதிர்பார்க்கல.. கர்ப்பமான நேரத்திலும் கருணை காட்டாத சீரியல்!..