Connect with us
siva

Cinema News

Amaran:  வாய வச்சுக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டாரா? அமரன் பற்றி ஞானவேல்ராஜா சொன்னத கேளுங்க

Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக வெளியான திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம்தான் அமரன். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டது.

உயிர்தியாகம்: நாட்டுக்காக திவீரவாதிகளிடம் போராடி உயிர் நீத்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவம்தான் இந்த அமரன் திரைப்படம். இந்த படம் வருவதற்கு முன்பு வரை மேஜர் முகுந்த் வரதராஜன் ஒரு ஆர்மி ஆஃபிஸர். வீர மரணம் அடைந்தார் என்றுதான் அனைவரும் உணர்ந்திருந்தனர். ஆனால் படத்தை பார்த்த பிறகு இப்படி ஒரு தியாகியா என்று போற்றும் அளவுக்கு அவருடைய தியாகம் பாராட்டப்பட்டது.

இதையும் படிங்க: Kavin: பிளடி பெக்கர் தோல்வியால் திடீர் முடிவெடுத்த கவின்… இதுக்கு சும்மா இருக்கலாம்…

பார்டரில் எதிரிகளை துவம்சம் செய்ய அவர் போட்ட திட்டம், 10 பேரில் நான் மட்டும் உள்ளே போகிறேன் என்று மற்றவர்களுக்காக இவர் செய்த அந்த தியாகம் என படத்தில் பார்க்கும் போது கண்ணீரையே வரவழைத்தது. இதற்கிடையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்தது இயக்குனர் செய்த நல்ல விஷயம். அதே போல் அவருடைய மனைவியான இந்து ரெபெக்கா வர்க்கீஸாக சாய்பல்லவியை நடிக்க வைத்ததும் படத்திற்கு கூடுதல் ப்ளஸ்.

ஞானவேல்ராஜாவின் கமெண்ட்: இந்த நிலையில் படத்தை பார்த்து அனைவரும் பாராட்டினர். ரஜினியில் இருந்து திரைபிரபலங்கள் பலரும் படத்தை இன்றுவரை பாராட்டி வருகிறார்கள். இதில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் படத்தை பார்த்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு போன் செய்து அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். படத்தை பார்த்ததும் டார்லிங் படம் பம்பாயில் அமரன் படத்தை தமிழ் வெர்ஷனில் பார்த்தேன்.

amaran

amaran

இங்கு அனைவரும் படத்தை பாராட்டுகிறார்கள். படத்தின் கடைசி க்ளைமாக்ஸில் ரியல் முகுந்த் அச்சமில்லை அச்சமில்லை பாடலை பாடும் போது அனைவரும் எழுந்து கைதட்டுகிறார்கள். படம் சூப்பராக இருக்கிறது. நான் கூட படத்தில் unfit cast னு நினைச்சேன். சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என பாராட்டினாராம். அதாவது படத்தில் சிவகார்த்திகேயன் செட் ஆவாரா என ஆரம்பத்தில் ஞானவேல்ராஜா நினைத்திருக்கிறார் போல.

இதையும் படிங்க: Nepoleon: 3 முறை அபார்ஷன்… அப்புறம் பிறந்தவன் தான் தனுஷாம்… நெப்போலியன் உருக்கம்

அபார வெற்றி: ஆனால் படத்தின் வெற்றிக்கு பிறகு அவரே ஆச்சரியப்பட்டு போனார். இது தெரிந்த ரசிகர்களும் ஞானவேல் ராஜாவை கிண்டலடித்து வருகின்றனர். அமரன் படம் ஓடாதுனு நினைச்சுதான் கங்குவா படத்தை 14 ஆம் தேதிக்கு கொண்டு வந்தார். ஆனால் அமரன் படம் வெளியாகி 12 நாள்களாகியும் 242 கோடி வரை வசூலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top