Connect with us

Cinema News

சூர்யாவை கேவலமாக நடத்தினார்! நடந்தது இதுதான்!.. அமீரின் புகாருக்கு வாய் திறந்த ஞானவேல் ராஜா!..

Surya vs Ameer: சூர்யா, கார்த்தி, சிவகுமார், ஞானவேல் ராஜா குறித்து அமீர் தொடர்ந்து சர்ச்சையான விதத்தில் பேசி வருகிறார். இந்த வீடியோக்கள் வைரலான நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக ஞானவேல் ராஜா கொடுத்திருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

அதில், 2016ம் ஆண்டிலிருந்து அமீர் எங்களை பற்றி தரக்குறைவாக தான் பேசி வருகிறார். ஆனால் நாங்கள் வாயே திறக்கவில்லை. இதற்கு காரணம் சிவகுமார் சார் தான். இதையடுத்து சமீபத்தில் கூட அமீர் இப்படி பேசி இருப்பது குறித்து அவரிடம் சொன்னேன்.

இதையும் படிங்க: ஆளவந்தான் படத்தில் அப்பவே அட்வான்ஸ் டெக்னாலஜியா? அப்படின்னா ஏன் படம் ஓடல?

அப்போ அவர் நீயும் சினிமாவில் தான் இருக்க போற. அமீரும் சினிமாவில் தான் இருக்க போறான். அவரை பற்றி தப்பா பேசாதே. நல்லவர்கள் என யாரிடம் நிரூபிக்க போகிறீர்கள். உன் இயக்குநரை ஒரு இடத்தில் கூட காயப்படுத்தி பேசிவிடக் கூடாது எனக் கூறினார்.

பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி 16 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து அந்த படத்தினை ரீ ரிலீஸ் செய்தோம். அப்போ எனக்கு அமீரிடம் பேச வேண்டும் போல இருந்தது. அவருக்கு கால் செய்தேன். பின்னர் நேரில் சந்தித்தோம். கிட்டத்தட்ட 8 மணி நேரம் என்னிடம் பேசினார். அதில் ஆறு மணிநேரம் அவர்கள் குடும்பத்தையும் என்னையுமே திட்டி பேசினார். கடைசியாக ஒரே ஒரு கேள்வி கேட்டேன். 

இதையும் படிங்க: கூட்டணி போட்ட பாக்கியா – ராதிகா.. என்னங்கடா நடக்குது இங்க? ஷாக்கில் ஈஸ்வரி- கோபி..!

நான், சூர்யா, கார்த்தி, சிவகுமார் சார் எல்லோரும் கெட்டவர்கள். ஆனால் இன்றும் எங்களால் சினிமாவில் இருக்க முடியுதே. உங்களை பார்த்தாலே எல்லாரும் தெறித்து ஓடுகிறார்களே எனக் கேட்டேன். அமைதியாகி விட்டார். மேலும் நந்தா ஷூட்டிங்கில் சூர்யாவை கேவலமாக நடத்தினார்.

அது மட்டுமில்லாமல் அவர்கள் சண்டை முத்தி பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது. அந்த படத்தின் இசை  வெளியீட்டிற்கு கூட சூர்யா வரவில்லை. அமீருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சண்டை போட்ட சூர்யா அண்ணனையே அவர் கொச்சைப்படுத்தி விட்டார் என்றார். பருத்தி வீரனில் தனக்கு நஷ்டம் என அமீர் பேசிய விவகாரம் சர்ச்சையான நிலையில் இந்த பேட்டியை ஞானவேல் ராஜா கொடுத்து இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top