ஜெயிலர் கதைதான் கோட்! யாரெல்லாம் இத கவனிச்சீங்க.. பெரிய குண்டை தூக்கிப் போட்ட இயக்குனர்

Goat : ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படமும் கோட் திரைப்படமும் ஒரே கதை என பிரபல இயக்குனர் ஒருவர் கூறிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கடந்த வாரம் மிகுந்த எதிர்பார்ப்பில் ரிலீசான திரைப்படம் தான் கோட்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படத்தில் பிரபுதேவா பிரசாந்த் அஜ்மல் மோகன் யோகி பாபு சினேகா லைலா மீனாட்சி சௌத்ரி போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

இதையும் படிங்க: ராமமூர்த்தியை நினைத்து புலம்பும் ஈஸ்வரி… திமிரா போச்சு விஜயா.. இன்னுமா ராஜியை வச்சு செய்றீங்க?

படத்தை பார்த்த அனைவரும் மிகவும் பாராட்டி வருகிறார்கள் .பல சர்ப்ரைஸ்கள் படத்தில் இருந்தன. மிகவும் சுவாரசியமாக படத்தை கொண்டு சென்று இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி கிட்டத்தட்ட கோட் திரைப்படத்தின் கதையும் ஜெயிலர் கதையும் ஒன்றுதான் எனக் கூறியிருக்கிறார்.

ஏனெனில் ஜெயிலர் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் மகன் வில்லன். மகனை இறப்பது மாதிரி காண்பித்து கடைசியில் அப்பாவுக்கு எதிராகவே வந்து நிற்பார். அதைப்போல கோட் திரைப்படத்திலும் மகன் வில்லன். மகனையும் ஒரு கட்டத்தில் மரணம் அடைவது மாதிரி காண்பித்து கடைசியில் அப்பாவுக்கு எதிராக வந்து நிறுத்தி இருப்பார் வெங்கட் பிரபு.

இதையும் படிங்க: இமானை மிரட்டினார் சிவகார்த்திகேயன்!. அதனால்தான் சொன்னோம்!.. வலைப்பேச்சு பகீர்!…

கிட்டத்தட்ட இரண்டு கதைகளும் ஒன்று தான் என கூறியிருக்கிறார். ஆனால் கோட் திரைப்படத்தில் வெங்கட் பிரபு செய்த ஒரு தவறு என்னவென்றால் ஒரு இயக்குனராக நான் பார்க்கும் பொழுது படத்தின் போஸ்டரிலேயே இரண்டு வேடம் என சொல்லிவிட்டார். ஆனால் படம் பார்க்கும் பொழுது ஒரு கட்டத்தில் மகன் இறப்பதும் அதை கண்டு விஜய் சென்டிமெண்டாக அழுவதும் சினேகாவும் அழுவதும் என அந்த காட்சியை பெரிதாக காட்டி இருக்க வேண்டாம்.

ஏனெனில் போஸ்டரிலேயே சொல்லிவிட்டார் இரண்டு வேடம் என்று .அப்போ படம் பார்க்கும் பொழுது கண்டிப்பாக இன்னொரு விஜய் வருவார் என்ற ஒரு மைண்ட் செட்டில் தான் படம் பார்ப்பார்கள். இன்னொரு விஜய் வருவார் என அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கும்போது இந்த அழும் சீனை பெரிய அளவில் நீட்டிருக்க வேண்டாம்.

இதையும் படிங்க: இதுல கிரிக்கெட்! அங்க ஃபுட் பாலா? ‘கோட்’ க்ளைமாக்ஸ இந்த படத்துல இருந்துதான் சுட்டுருக்காரா?

ஏனெனில் அது ரசிகர்களை கனெக்ட் செய்யாது. திரும்ப இன்னொரு விஜய் வருவார் என தெரியும். அப்படி இருக்கும் பொழுது ஏன் அந்த மாதிரி சென்டிமென்ட்டாக அழ வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன் என பிரவீன் காந்தி கூறியிருக்கிறார். அதைப்போல ஜெயிலர் திரைப்படத்திலும் மகன் இறந்து விடுகிறான்.

ஆனால் திரும்பவும் வருவான் என்பது கதை. அதனால் மகன் இறந்து விட்டான் என ரஜினி உட்கார்ந்து அழ மாட்டார். ரம்யா கிருஷ்ணனும் அழ மாட்டார். அதனால் அந்த சீனை அப்படியே நகர்த்தி கொண்டு போய்க் கொண்டே இருந்தார்கள். அதே மாதிரி கோட் திரைப்படத்திலும் வைத்திருக்கலாம். இவ்வளவு நீளம் தேவையில்லை என பிரவீன் காந்தி கூறியிருக்கிறார்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it