ராஜதுரை படத்துல விஜயகாந்த் தான் ஹீரோ. ஜெயசுதா ஹீரோயின். ஆனந்த்ராஜ் வில்லன். அந்த ஊருல அவர் வச்சது தான் சட்டம். கிராமத்து மக்களைக் கொடுமைப்படுத்துறாரு. இதை யார் தட்டிக் கேட்பான்னு மக்கள் எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க.
அப்போ ராஜதுரை என்ற போலீஸ் அதிகாரியா விஜயகாந்த் வர்றாரு. நான் அந்தக் கிராமத்துக்குப் போறேன்னு சொல்றாரு. அவரைக் கைது பண்றேன்னு சொல்றாரு. அங்கு போய் ஆனந்த்ராஜைக் கைது பண்ணி கூண்டில் ஏற்றுகிறார்.
ஜெயில்ல இருந்து வெளிய வந்ததும் ஆனந்த்ராஜ் எப்படியாவது விஜயகாந்தைப் பழி வாங்கணும்னு நினைக்கிறார். அவரோட குழந்தையைக் கடத்துகிறார். அதை வளர்க்கிறார். அவர் தான் அருண் என்ற குட்டி விஜயகாந்த். அவரை போதைப்பொருள் கடத்துதல் போன்ற தப்பான வழிகளில் ஈடுபடுத்துறாரு.
போலீஸ்காரன் பையன் திருடனான்னு கடைசியில தான் விஜயகாந்;துக்குத் தெரியவரும். ஆனா அம்மாவோ நம்ம பையன் நம்ம கூட திரும்பி வரணும்னு நினைப்பாங்க. ஆனா குட்டி விஜயகாந்த் ஆனந்த்ராஜைத் தான் அப்பாவா ஏத்துக்குவாரு.
கடைசியில எப்படி ஒண்ணு சேர்ந்தாங்கன்னு தான் கதை. இதே மாதிரி தான் கோட் படமும் இருக்கும். ராஜதுரை படத்தை டைரக்ட் பண்ணினது விஜயோட அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.
Also read: கோட் படத்தோட வெற்றி ரகசியம் இதுதானாம்… அப்படி என்னப்பா இருக்கு படத்துல?
பானுப்பிரியா தான் கேமியோ ரோல் ஸ்பெஷல் டான்ஸ் பண்ணியிருப்பாங்க. கோட் படத்துக்கு அதே மாதிரி திரிஷா கேமியோ ரோல் பண்ணியிருப்பாங்க. இந்தப் படத்துக்கும் ஒரு பாட்டுக்கு கோரியோகிராபர் பிரபுதேவா தான்.
கோட் படத்துலயும் அவர் இருக்காரு. அதே மாதிரி இரண்டு படத்துலயும் விஜயகாந்த் இருக்காரு. இப்படி நிறைய கனெக்ஷன் இருக்கு. வெங்கட்பிரபு இந்தப் படத்தைப் பார்த்து தான் இன்ஸ்பைர் ஆனாரான்னு தெரியல. ஆனா ஜெமினிமேன் படத்தை அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…