Categories: Cinema News latest news

அந்த டைட்டில் ‘எங்களுக்கு’ கெடைக்கல… சஸ்பென்சை உடைத்த வெங்கட் பிரபு!

தான் மனதில் நினைத்து வைத்திருந்த டைட்டில் தனக்கு கிடைக்கவில்லை என இயக்குநர் வெங்கட் பிரபு ஓபனாக பேசியுள்ளார்.

விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் கோட் படம் வருகின்ற செபடம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. யுவன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விஜயின் அரசியல் பிரவேசத்தால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் படத்தின் புரோமோஷனுக்காக வெங்கட் பிரபு அளித்துள்ள பேட்டியில் படத்தின் டைட்டில் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதன்படி முதலில் இப்படத்திற்கு காந்தி என்று தான் வெங்கட் பிரபு டைட்டில் வைத்தாராம். ஆனால் அந்த தலைப்பு கிடைக்காது என்பதால் எப்போதும் சிறந்த தலைவர் என்பதைக் குறிக்கும் வகையில் கோட் என வைத்ததாகவும், இந்த தலைப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் பகிர்ந்து உள்ளார்.

படத்தின் டிரெய்லரில் காந்தியைக் குறிக்கும் வகையில் வசனங்கள் இடம்பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தற்போது வெங்கட் பிரபு சொல்வதைக் கேட்டால் காந்தி போல இருக்கும் விஜய் சண்டை போடுபவராக மாறுவது தான் கதையாக இருக்கும் என தெரிகிறது.

என்றாலும் படத்தின் கதையை அறிந்துகொள்ள நாம் செப்டம்பர் 5-ம் தேதி வரையில் நாம் காத்திருக்க வேண்டியது தான்.

Published by
manju