More
Categories: Entertainment News

ஏய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே!.. கோட் ஹீரோயின் கேரளாவில் என்ன பண்றாரு பாருங்க!..

கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மீனாட்சி சவுத்ரி கேரளாவில் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்க எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான அப்ஸ்டார்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான கில்லாடி, ஹிட் தி செகண்ட் கேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: கோட் கூட எல்லாம் போட்டியில்லை!.. சிவகார்த்திகேயனின் அமரன் எந்த தேதியில் ரிலீஸ் ஆகுது தெரியுமா?..

தமிழில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கொலை படத்தின் மூலம் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீனாட்சி சவுத்ரி தளபதி விஜய்க்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்து வருகிறார்.

வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி கோட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. தனது குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த மீனாட்சி சவுத்ரி தற்போது கேரளாவில் உள்ள சுற்றுலாத்தலங்களில் டூர் அடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பின்வாங்குற பேச்சுக்கே இடமில்லை!.. அதிரடி காட்டும் தனுஷ்.. ராயன் படத்தின் மாஸ் அப்டேட் இதோ!..

சேலை கட்டிக்கொண்டு தலைநிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு மீனாட்சி சௌத்ரி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு எக்கச்சக்க ஹார்ட்டின்களை போட்டு வருகின்றனர்.

கோட் படத்தில் இளம் விஜய்க்கு இவர் தான் ஜோடி எனக் கூறுகின்றனர். அப்பா விஜய்க்கு நடிகை சினேகா ஜோடியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட் படத்துக்கு பிறகு மீனாட்சி சவுத்ரியின் மார்க்கெட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பாலிவுட் ஸ்டைலில் மாஸ் காட்டும் நாட்டாமை மகள்… கல்யாணம் எப்போ, எங்க தெரியுமா?

Published by
Saranya M