லியோ வசூலையே கோட் தொட முடியல... ஜெயிலர்கிட்டன்னா வாய்ப்பில்லை ராஜா
கோட் படத்தோட வசூல் நிலவரத்தை லியோ, ஜெயிலர் படங்களுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதர். வேறு என்னென்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
கோட் படத்துக்கு தமிழகத்தில் நல்ல வசூல்னு நான் நினைக்கிறேன். எல்லாப் படங்களைப் பொருத்தவரை காலை, மேட்னி வசூல் நல்லாருக்கும். ஈவ்னிங், நைட்ஷோ குறையும். ஆனா இந்தப் படத்துக்கு ஈவ்னிங், நைட்ஷோ நல்லாருக்கு. பெண்கள், குழந்தைகள் கூட்டம் அதிகம். மொத்தத்துல இந்தப் படத்துக்கு 69 லட்சம் பார்வையாளர்கள் வந்துருக்காங்க. ஆனா இந்தப் படம் லியோவோட கலெக்ஷனை விட கம்மி தான்.
விடுமுறை நாள்கள் குறையாக இருந்ததால வசூல் அதிகமாகவில்லைன்னு நினைக்கிறேன். வியாழக்கிழமை இருந்த வசூலுக்கும், வெள்ளிக்கிழமை இருந்த வசூலுக்கும் சம்பந்தமில்லை. அதே நேரம் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி. மறுநாள் ஞாயிறு ஹாலிடே. இதனால அந்த நாள்களில் நல்ல வசூல்.
முதல் நாள் உலகம் முழுவதும் 126 கோடி. அடுத்த நாலு நாள் சேர்த்து 280 கோடின்னு தயாரிப்பு தரப்புல வெளியிட்டாங்க. இந்தப் படத்தைப் பொருத்தவரை நல்ல படம். செகன்ட் ஆப்ல டைரக்டர் என்கேஜ்டா வச்சிருக்காரு. யுவன் சங்கர் ராஜா ஏமாற்றம் தான். படத்தோட லென்த் கூட. 2வது கதாநாயகியா வர்ற பொண்ணு அவ்வளவு பெரிய ஈர்ப்பு சக்தியா தெரியல.
இந்தப் படத்தில் 'தல'ன்னு ஒரு டயலாக்கை ஒரு பொண்ணு சொல்லுது. அந்தப் பொண்ணே திரும்ப பேட்டியில எனக்குத் தளபதியைத் தான் ரொம்ப பிடிக்கும். 'தல'ன்னு நான் சொன்னது தோணியைத் தான். இது தேவையில்லாத குழப்பம். என்னைப் பொருத்தவரை ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சின்னதா ஒரு லாபம் வரும்னு நினைக்கிறேன். இந்தப் படத்துக்கு 2வாரத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ல 75 பர்சன்ட் தொகை வாங்கியிருக்காங்க.
இது பெரிய அளவில் அவருக்கு லாபம் வராது. முதல் வாரம் 75 சதவீதம் கொடுத்தா 2வது வாரம் 70 பர்சன்ட் தான் கொடுக்கணும். இது தான் நிபந்தனை. அரண்மனை 4, தனுஷ் படம், மகாராஜா, கருடன் இந்தப் படங்கள் தான் இந்த வருஷத்துல ஓடுச்சு. வேறு வழியே இல்லை. தியேட்டரை ஓட்டியே ஆகணும்னு தான் ஆகணும். கேன்டீன் வரணும்.
Also read: கங்குவா ரிலீஸ் தேதி எப்போன்னு தெரியுமா? அடடா சூப்பரான நாளை குறி வச்சிட்டாங்களே..!
அதனால தான் அதுக்குக் காம்ப்ரமைஸ் பண்ணி தியேட்டர்காரங்க அதுக்குப் போட்டுக்கிட்டாங்க. லைப் டைம் ரன் என்பதே அதிகபட்சம் 4 வாரம் தான். அப்போ தான் இதோட லாப நஷ் கணக்கு தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஜெயிலர் படத்துக்கு இந்தப் படத்தோட வசூலைக் கம்பேர் பண்ணும்போது அதோட வசூலை முறியடிக்குமான்னு கேட்டா சீமான் பாணியில சொல்லணும்னா 'அதுக்கு வாய்ப்பில்லை ராஜா' என்றும் பதில் அளித்துள்ளார்.