'கோட்' படத்தின் 4வது சிங்கிளும் போச்சா? மொத்தமா ஏமாத்திபுட்டாங்கப்பா..

by Rohini |
matta
X

matta

Goat Movie: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி இருக்கும் கோட் திரைப்படத்தின் நான்காவது பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றிய யுவன் சங்கர் ராஜா இந்த நான்காவது பாடலிலாவது ரசிகர்களை திருப்திப்படுத்தினாரா என்பதை பார்க்க வேண்டும்.

ஆனால் மற்றும் மூன்று பாடல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இந்த நான்காவது பாடலான ‘மட்ட’ பாடல் ரசிகர்களை அதிக அளவில் திருப்திப்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். விஜய்க்கே உரிய அந்த டான்ஸ், பீட் எல்லாமே இந்த பாடலில் இருப்பதாகவே ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: அட்ரா சக்க… ஒருவழியா விஷயத்தை உடைச்சிட்டாங்கப்பா… கூலி படத்தின் அடுத்த கேரக்டர்…

அதிலும் இந்தப் பாடலில் இதற்கு முன் விஜய் நடித்த படங்களில் உள்ள மேனரிசம் அனைத்தையும் வெங்கட் பிரபு இதில் பயன்படுத்தி இருக்கிறார். பிகில், தெறி, மெர்சல், சர்க்கார், லியோ, தலைவா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் விஜய்க்கே உரிய மேனரிஸம் எல்லாம் இந்த படத்தில் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி காட்டி இருக்கிறார் வெங்கட் பிரபு.

இந்தப் பாடலை பொருத்தவரைக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக கருதப்படுவது விஜயுடன் கோட் படத்தில் ஒரு பாடலில் திரிஷா ஆடி இருக்கிறார் என்று ஒரு செய்தி வெளியானது. வெளியான மூன்று பாடல்களிலும் திரிஷா இல்லாதது இந்தப் பாடலில் கண்டிப்பாக இருப்பார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்து இருந்தார்கள்.

vijay

vijay

இதையும் படிங்க: ‘ரிதம்’ படத்தில் ஜோதிகாவுக்கு பதில் நடிக்க இருந்த நடிகை! லைஃபே மாறியிருக்குமே

ஆனால் இந்தப் பாடலிலும் திரிஷா இல்லாதது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆக மொத்தம் ஏற்கனவே வெங்கட் பிரபுவிடம் நிருபர் ஒருவர் படத்தில் திரிஷா ஆடி இருக்காரா இல்லையா என்ற ஒரு கேள்வி கேட்டபோது அப்படியா திரிஷா இருக்காங்களா என்று அவருக்கே தெரியாத மாதிரி கேட்டிருந்தார்.

ஆனால் உண்மையிலேயே திரிஷா இந்த படத்தில் இல்லை என்று இப்போது தெரிகிறது என ரசிகர்கள் இந்த நான்காவது பாடல் வெளியானதிலிருந்து புலம்பி தீர்த்து வருகின்றனர். விவேக் வரிகளில் இந்த பாடல் ரசிகர்களை ஆட வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: கோட் ஹிட்டடிக்கும்.. மத்தவங்களுக்கு அனிருத் வேணும்… யாரோ தாக்கப்பட்டாங்களோ?

Next Story