கோட்ல அது மட்டும் ஒட்டவே இல்ல... பிரபலம் சொன்னது என்னன்னு தெரியுதா?
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த கோட் படம் ரிலீஸாகி விட்டது. அது வசூலிலும் களைகட்டி வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. படம் வெளியான பிறகு வலைப்பேச்சு அந்தனன் சொல்வது இதுதான்.
வெங்கட்பிரபு படத்துல அரை மணி நேரத்தைக் குறைச்சிருந்தா ரொம்ப பெட்டரான படமா இருந்துருக்கும். மாநாடு படத்துல அருமையான ஸ்கிரின்பிளே இருக்கும்.
இதுலயும் ட்விஸ்ட் வச்சி பின்னிப் பின்னிக் கொண்டு போயிருக்காரு. பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் எல்லாருக்கும் நல்லா ஸ்பேஸ்ல கொடுத்துருக்காரு. மோகனுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுத்துருக்கலாம். யார் மனசும் நோகாம எடுத்துருக்காரு.
விஜயகாந்தை விஜயகாந்தாகவே காமிச்சிருக்கலாம். வர்றாரு. ஒரு பைட் இருக்கு. அதுக்கு அப்புறம் விஜய் என்ட்ரி கொடுத்தாருன்னா பிரமாதமா இருந்துருக்கும்.
விஜயகாந்துக்கு இன்னும் டைம் எடுத்து ஒர்க் அவுட் பண்ணிருக்கலாம். அவருக்குள்ள வேற ஒருத்தரைக் கொண்டு வந்தது மட்டும் ஒட்டவே இல்லை. கில்லி படத்துல வர்ற அப்படி போடு மாதிரி வந்துருக்க வேண்டிய சாங். இன்னும் கொஞ்சம் திரிஷா பாட்டுக்கு மெனக்கிட்டுருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் உள்படல பலர் நடித்த படம் கோட். கடந்த செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
அரசியலிலும் அடி எடுத்து வைத்துள்ள விஜய் என்பதால் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. படத்தில் ரசிகர்களுக்கு மனம் கோணாத வகையில் விஜயும் வழக்கமான மசாலா கலந்த அதிரடி கமர்ஷியல் ஹிட்டைக் கொடுத்துள்ளார்.
படம் பார்த்த எல்லாருமே வேற லெவல், சான்ஸே இல்ல, தெறி மாஸ்னு தான் சொன்னாங்க. இதுஒரு புறம் இருக்க, படத்தில் நெகடிவிட்டி என்று பார்த்தால் சிஜி ஒர்க் தான் என்கிறார்கள். விஜயகாந்த், டீஏஜிங் விஜய் எடுபடல. விஜய்க்கு யார் விக் வச்சதுன்னு தெரியல.
Also read: 80 கோடி டேக்ஸ் விஜய் கட்டிருக்காரு… ஆனா கமல், ரஜினி, அஜீத் எல்லாம் எங்கப்பா?
அவருக்கு 1000 மனுக்கள் போடணும் என்கிறார் பிரபல வலைப்பேச்சு அந்தனன். அதே போல திரிஷாவுக்கும் பாடலில் பெண் குரல் இல்லாமல் போனது மைனஸாகப் பார்க்கப்படுகிறது.