ஓடிடியே இத்தனை கோடியா?!. லியோவை ஓவர் டேக் செய்யும் கோட்!.. சம்பவம் செய்த வெங்கட்பிரபு..

Goat: லியோ படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இப்படத்தை பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. வெங்கட்பிரபு இயக்கி வரும் இப்படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். எனவே, இப்படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, சினேகா, அஜ்மல், பிரசாந்த் என பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா என பல நாடுகளிலும் நடந்து வருகிறது இப்படத்தின் சண்டை காட்சிகள் ஆக்ஷன் விரும்பிகளுக்கு சூப்பர் ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: விஜய்க்கு எங்கயோ மச்சம்தான்!.. புடவையில் மனச கெடுக்கும் ‘கோட்’ பட நடிகை….
இப்படம் வருகிற கோடைகால விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜயை இளமையாக காட்டுவதற்காக ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் ஏஜிங் தொழில்நுட்பத்தை படக்குழு பயன்படுத்தி வருகிறது.
இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக விஜய் தனது மீசை, தாடி என எல்லாவற்றையும் எடுத்திருக்கிறார். நேற்று ரசிகர்கள் முன்பு அவர் எடுத்துகொண்ட செல்பி புகைப்படமும் வெளியாகி வைரலாகியது. ஒருபக்கம் கோட் படத்தின் வியாபாரங்களும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், சிம்புவுக்கு தான் கடைசி!.. இனி யாருக்கும் வாய்ப்பு இல்ல.. கமலின் அதிரடி முடிவு!..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.125 கோடி விலைக்கு வாங்கியது. ஆனால், கோட் படத்தின் ஓடிடி உரிமை அதை விட அதிகமாக போகும் என சொல்லப்படுகிறது. அதாவது, ஓடிடி உரிமையையே தயாரிப்பாளர் தரப்பு இரண்டாக பிரித்துவிட்டது. தென்னிந்திய உரிமை (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) மட்டும் ரூ.125 கோடி என சொல்லிவிட்டனர். இதற்கு நெட்பிளிக்ஸ் ஒத்துக்கொண்டால் கோட திரைப்படத்தின் வியாபாரம் லியோவை தாண்ட வாய்ப்பிருக்கிறது.
ஏனெனில், வட இந்திய ஓடிடி உரிமையும்(ஹிந்தி) பல கோடிகளுக்கு விற்பனை ஆகும். அதுமட்டுமில்லாமல் தியேட்டர் மூலம் கிடைக்கும் உரிமை, இசை உரிமை, மற்ற மொழி உரிமைகள், தொலைக்காட்சி உரிமை என எல்லாவற்றையும் கணக்குப்போட்டு பார்த்தால் கோட படம் நன்றாகவே கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு எங்கயோ மச்சம்தான்!.. புடவையில் மனச கெடுக்கும் ‘கோட்’ பட நடிகை….