எலே! எத்தனை கேமியோ இருக்குப்பா.. கோட் படத்தில் முன்னணி நடிகரா? ஆத்தாடி!
Goat: விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் உருவாகி வருகிறது. இப்படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜயுடன் சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க:கவர்ச்சி காட்டி நடிச்சி அந்த படத்தோட வாய்ப்பு போச்சி!.. புலம்பும் பிரபல நடிகை….
படத்தின் பாடல்கள் இதுவரை மூன்று ரிலீஸ் செய்யப்பட்டாலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. விஜயின் பாடல்கள் பெரிய ஹிட் அடிக்கும் என்ற விஷயத்தினை உடைத்து விமர்சனத்தினையும் குவித்துள்ளது. இருந்தும் படக்குழு ஓவர் எதிர்பார்ப்பால் ரிலீஸில் அடி வாங்குவதை விட இது பரவாயில்லையே என்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு இது செம டிரீட்டாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்நிலையில் ஏற்கனவே கோட் திரைப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இருக்கிறது.
இதையும் படிங்க:மாயமான சூர்யா! ஸ்தம்பித்த படக்குழு.. சூர்யா 44ல் நடந்தது என்ன?
ஒரு பக்கம் விஜயகாந்த் ஏஐயில் வர இருப்பதாக தகவல்கள் கசிந்தது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கேவை சேர்ந்த முக்கிய வீரர்கள் கூட படத்தில் சில காட்சிகள் வருவார்கள் எனவும் தகவல்கள் கசிந்தது. இதுமட்டுமல்லாமல் தற்போது ஒரு முக்கிய விஷயம் கசிந்துள்ளது.
அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் கோட் திரைப்படத்தில் ஸ்பெஷல் கேமியோ ரோலில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் 5ந் தேதி கோட் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இத்தகவலால் ரசிகர்கள் செம குஷியில் இருப்பதாக கூறப்படுகிறது. டிரைலருக்கு முன்னரே விஜய் ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் ட்வீட்கள் பறந்து வருகிறது.