கோட் படத்தோட கிளைமாக்ஸ்ல இயக்குனர் செய்த புதுமை... வேற லெவல் ஃபீலிங்!

by sankaran v |
Goat
X

Goat

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் கோட். இது அவரது 68வது படம். இந்தப் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

விஜய் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் நடிக்கிறார். அவருடன் இணைந்து பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மீனாட்சி சௌத்ரி, சிநேகா உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் தோன்றுகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால் படத்தைப் பார்க்கும் ஆவலில் உள்ளனர்.

கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் இந்தப் படம் வெளியாகிறது. படத்தில் மோகன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேம்ஜி, யோகிபாபு, லைலா, பார்வதி நாயர், விடிவி கணேஷ், கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர்.

venkatprabu, vijay

venkatprabu, vijay

படத்தை ஆங்கிலத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமாக கோட் (GOAT )என்று டைட்டில் வைத்துள்ளார்கள். ஆனால் படத்தின் முழு பெயருடன் தான் போஸ்டர் வெளியாகி வருகிறது.

கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் நீளம் என்றதும் ரசிகர்கள் சோர்ந்து விட வேண்டாம். படத்தில் வரும் காட்சிகளைப் பார்க்கும்போது அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும். அதனால் நமக்கு அலுப்பே வராது என்றும் சொல்கிறார்கள். படத்தின் கிளைமாக்ஸ் குறித்து பிரபல வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்து இருக்கும் தகவல் ஆச்சரியப்படுத்துகிறது.

Also read: விஜயிடம் போனில் பேசிய அஜித்!.. தளபதியிடம் தல சொன்னதுதான் ஹலைட்!….

வழக்கமாக படங்களில் காட்டும் கிளைமாக்ஸ் போல கோட் படத்தில் இருக்காது. வில்லனைத் தூக்கிப் போட்டு ஹீரோ மிதிப்பது என வெறும் சண்டையாக மட்டும் கிளைமாக்ஸ் இருக்காது. அதிலும் பல ட்விஸ்ட் இருக்கும். அந்த 15 நிமிடங்கள் கிளைமாக்ஸைப் பார்க்கும்போது படம் இவ்வளவு பெரிதாக இருக்கிறதா என்ற அலுப்பே வராதாம்.

அந்த அளவுக்கு அவ்வளவு நேரம் படத்தைப் பொறுமையாகப் பார்த்தவர்களுக்கு அந்த எண்ணமே வராதவாறு புத்துணர்ச்சியைத் தரும் வகையில் கிளைமாக்ஸைப் பட்டைத் தீட்டியிருக்கிறார்களாம். அப்புறம் என்ன கோட் படத்தை முதல் ஆளா போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Next Story