IMAX மட்டுமில்ல!.. இன்னொன்னும் இருக்கு!.. கோட் அப்டேட் கொடுத்து அதிரவிட்ட வெங்கட்பிரபு...
Goat: லியோ படத்திற்கு பின் விஜய் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கோட். வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே விஜய் இப்படி சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயை மிகவும் இளமையாக காட்டி இருக்கிறார்கள்.
இதுவே இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சில போஸ்டர்களும், மூன்று பாடல்களும் வெளியாகியிருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான அந்த பாடல்கள் ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும், படம் வெளியான பின் அந்த பாடல்கள் ஹிட் அடிக்க வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது.
இந்த படத்தில் அப்பா விஜய்க்கு சினேகாவும், மகன் விஜய்க்கு மீனாக்ஷி சவுத்ரியும் நடித்துள்ளனர். இந்த படத்தில் பல புதிய முயற்சிகளை வெங்கட்பிரபு செய்திருக்கிறார். ஏஜிங் தொழில்நுட்பத்திற்காக விஜயை அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு போனார். விஜயின் திரை வாழ்வில் இதுதான் அவருக்கு முதன் முறை.
சில வெளிநாடுகளில் இப்படத்தின் சண்டை காட்சிகளை படம்பிடித்துள்ளனர். மேலும், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் இணைந்து கலக்கி இருக்கிறார்களாம். இப்படத்தை விஜய் பார்த்துவிட்டு ‘அவசரப்பட்டு ரிட்டயர்மெண்ட் அறிவிச்சிட்டேன். இன்னும் ஒரு படம் உன்கூட நடிச்சிருக்கலாம்’ என விஜய் சொன்னதாகவெல்லாம் செய்திகள் வெளியானது.
படம் தியேட்டரில் பார்க்கும் போது நல்ல அனுபவம் கிடைக்க வேண்டும். இப்போது PVR, INOX என நிறைய மால்கள் வந்துவிட்டது. ஏற்கனவே, கோட் படம் IMAX தொழில்நுட்பத்திலும் வெளியாகும் என வெங்கட்பிரபு அறிவித்திருந்தார். இந்நிலையில், EPIQ தொழில்நுட்பம் உள்ள திரையரங்குகளிலும் இப்படம் வெளியாகும் என அவர் அறிவித்திருந்தார். இந்த அனுபவத்தை QUBE நிறுவனம் கொடுக்கவிருக்கிறது.
கோட் திரைப்படம் வருகிற செப்டம் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். அதன் பின் அவர் நடிப்பாரா இல்லையா என்பது அவரின் அரசியல் நடவடிக்கைகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.