More
Categories: Cinema News latest news

கோட் ஷூட்டிங்கில் ரசிகர்களை சந்திக்கும் விஜய்!… கெட்டப்பால் கவலைப்படாத வெங்கட் பிரபு!… ஏன் தெரியுமா?

Goat Movie: விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், விஜயின் ரசிகர்கள் சந்திப்பும் அதிகமாகி இருக்கும் காரணம் குறித்து தற்போது பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்து இருப்பது வைரலாகி வருகிறது.

கோட் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அவ்வப்போது அதே கெட்டப்புடன் விஜயும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இதுகுறித்து கேட்கும் போது ஒரு சின்ன ரோல் செய்யும் நடிகர்களே எதுவும் கெட்டப் சேன்ஞ் என்றால் வெளியவே வரமாட்டார்கள்.

இதையும் படிங்க: மார்க் ஆண்டனி லுக்கில் மாஸ் காட்டுறாரே! புதிய பட போஸ்டருடன் பொங்கல் வாழ்த்து கூறிய சந்தானம்

ஆனால் விஜய் மீசை மற்றும் தாடியை எடுத்துவிட்டு அசால்டாக ரசிகர்களை சந்திக்கிறார். போட்டோலாம் எடுத்துக்கிறாரே எனக் கேட்ட போது ரசிகர்களுடன் விஜய் தோன்றும் கெட்டப்பில் விஜய் படத்தில் வரவே மாட்டாராம். இந்த மீசை தாடியை எடுத்தது இளம் வயது கெட்டப்புக்காக தான்.

இந்த காட்சிகள் எடுக்கப்பட்டு டீ ஏஜிங் செய்ய அமெரிக்கா எடுத்து சென்று அங்கு அவரை அந்த ரெட்ரோ கெட்டப்புக்கு மாற்றியே படத்தில் இடம்பெற செய்வார்கள். இதனாலே விஜயும் சரி வெங்கட் பிரபுவும் சரி அவர் அதே தோற்றத்தில் வெளியில் வருவதை பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை. 

இதையும் படிங்க: அசோகனை செல்லமாக அழைத்த எம்.ஜி.ஆர்!… பதறி போய் காலை பிடித்து கதறிய சம்பவம்…

இந்நிலையில் கோட் படத்தின் மூன்றாவது லுக் இன்று வெளியிடப்பட்டது.அதில் அஜ்மல், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர். மற்ற போஸ்டர்களை போல இல்லாமல் விஜய் இதில் வேறு கெட்டப்பிலும் இருக்கிறார். கிட்டத்தட்ட அஜ்மல் மற்றும் பிரசாந்த் நெகட்டிவ் ஷேட் இருக்கும் எனவும் இப்போதே ரசிகர்கள் டிகோடிங்கை தொடங்கிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts