Categories: Cinema News latest news

வேண்டாம் வந்துராதீங்க.. ரொம்ப கஷ்டப்பட்டு வெளியில வந்தோம்… கண்ணீர்விடும் விஜய் ரசிகர்கள்

GoatMovie: நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றிருக்கும் நிலையில் லண்டன் விஜய் ரசிகர்கள் தெறித்து ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய், பிரசாந்த். பிரபுதேவா, சினேகா, லைலா, ப்ரேம்ஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோட் முதல் நாள் வசூல் எவ்வளவு?… கடைசி நேரத்தில் காலை வாரிய ஹிந்தி வெர்சன்!..

முதலில் இப்படத்தின் கதை டைம் டிராவல் பற்றியதாக இருக்கும் என பல எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவியது. ஆனால் தன்னுடைய பேட்டிகளில் முதலில் இருந்தே இது சயின்ஸ் பிக்சன் கதை இல்லை என்பதை வெங்கட் பிரபு தெளிவாக கூறிவிட்டார்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் இருக்காது. இதனால் படத்தின் வசூலிலும் பிரச்சனை வராது என படக்குழு நம்பியது. அதற்கு ஏற்ப வெளிவந்த எல்லா பாடல்களுமே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது.

இதையும் படிங்க: முதல் நாள் வசூலே இவ்வளவு கோடியா?!. உலக அளவில் மாஸ் காட்டும் கோட்!…

ஆனால் வெங்கட் பிரபுவின் ட்ரெய்லர் ஒரே நாளில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சபட்சமாக அதிகரித்து விட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த பேட்டிகளிலும் படம் பெரிய அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக சாதாரண கமர்சியல் கதையில் தேவையே இல்லாமல் நிறைய காட்சிகளை திணித்திருப்பதாக விஜய் ரசிகர்களை கமெண்ட் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் லண்டனில் இருக்கும் விஜய் ரசிகர்கள் கூட இப்படம் சரி இல்லை என கூறி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவைக் காண: https://x.com/Trollers_D/status/1831719288937271579

Published by
Akhilan