மங்காத்தா விட கோட் மாஸ் காட்டும்… சம்பவம் சிறப்பா இருக்கும்… ஓபனாக பேசிய பிரபலம்!…

Published on: April 18, 2024
---Advertisement---

Goat Movie: விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படம் குறித்து அதில் நடித்து இருந்த நடிகர் அஜ்மல் ஓபனாக சொல்லி இருக்கும் அப்டேட் வைரலாகி வருகிறது. இதை கேட்ட ரசிகர்கள் ஓவர் பில்டப்பா இருக்கே எனக் கலாய்த்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அல்பாத்தில் எஸ்.அகோரம் சார்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தூக்கி வச்சு கொண்டாடுனாங்க.. ஆனா, ஒரே பாட்டில் காலி பண்ணிய கோட்…யுவன் கொடுத்த திடீர் ஷாக்!

அப்பா- மகன் என இரு வேடத்தில் ஒன்று வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இப்படத்தின் கதை ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், டைம் டிராவல் படமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருக்கிறது.

அது முடிந்த பின்னர் மற்ற அப்டேட்கள் குறித்த தகவல்கள் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான விசில் போடு பாடல் பெரிய அளவில் வைரலானது. ஆனாலும் மற்ற விஜய் பாடல் போல இல்லாமல் இருப்பதாக நெகட்டிவ் விமர்சனமும் அப்பாடல் மீது நிலவியது. 

இந்நிலையில் இப்படத்தில் விஜயின் கேங்கில் முக்கிய இடம் பிடித்து இருக்கிறார் அஜ்மல். பிப்ரவரி 14 படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அதை தொடர்ந்து அவருக்கு பாசிட்டிவ் கேரக்டரை விட நெகட்டிவ் ரோலே அதிக அளவில் வரவேற்பை பெற்று தந்தது.

இதையும் படிங்க: குருவுக்காக சிஷ்யன் செஞ்ச வேலையை பாருங்க.. ஷங்கர் இல்லத் திருமணத்தில் முகத்திரையை கிழித்த அட்லீ

அதனால் கோட் படத்திலும் அஜ்மலுக்கு தான் நெகட்டிவ் கேரக்டர் தானோ எனக் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அவர் அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியில், மங்காத்தா கேங்கை விட விஜயின் ஸ்குவாட் பெரிய அளவில் ஹிட்டடிக்கும். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்தில் அஜித்துடன் மகத், வைபவ் ஆகியோர் முக்கிய இடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.