More
Categories: Cinema News latest news

கோட் படம் வெங்கட் பிரபு யூனிவர்ஸா!.. அதுக்குத்தான் அஜித், சூர்யா, சிம்பு பட ரெஃபரன்ஸ் இருக்கா?..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எல்சியூவில் கடைசியாக விஜய் நடித்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படமும் வெங்கட் பிரபு யுனிவர்ஸ் தான் என்பதை அவரது தம்பி பிரேம்ஜி கூட்டத்தில் கட்டுச் சோறை அவிழ்ப்பது போல தற்போது அவிழ்த்து விட்டார்.

கோட் படத்தில் பிரேம்ஜி, வைபவ் மற்றும் வெங்கட் பிரபு படங்களின் நடித்த நடிகர்கள் பலர் இடம்பெற்றுள்ள நிலையில் டைம் டிராவல் படமாக வெங்கட் பிரபு இதை இயக்கி வருகிறாரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோர்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு பாடல் தற்போது வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடிய அந்த பாடல் வேற லெவல் சோசியல் மீடியாவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: சரக்கடித்து விட்டு ஷூட்டிங்!. கடுப்பான இயக்குனர்!.. மனிஷா கொய்ராலாவுக்கு மார்க்கெட் போனது இப்படித்தான்!

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் பாடல் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் விஜய், பிரபுதேவா மற்றும் பிரசாந்தின் நடனம் பாடலை சூப்பர் ஹிட்டாகிவிடும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், இந்தப் பாடலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அஜித்தின் மங்காத்தா, சூர்யாவின் மாஸ், கார்த்தியின் பிரியாணி மற்றும் சிம்புவின் மாநாடு என வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படங்களின் ரெஃபரன்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: அஜித் சம்பளம் மேலே போக காரணமே விஜய்தான்!.. பிரபல தயாரிப்பாளர் கொடுத்த ஷாக்..

சும்மா ஒன்றும் வந்து பிரபு வைத்திருக்க மாட்டார் என்றும் பிரேம்ஜி ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இது டைம் டிராவல் படமாக இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் மற்ற படங்களின் நடிகர்களும் சர்ப்ரைஸாக கோட் படத்தில் தலைக்காட்ட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

மங்காத்தா அஜித் மற்றும் மாஸ் சூர்யா ஒரு சின்ன கேமியோவுக்கு வந்தால் கூட கோட் படத்தின் வசூல் எங்கேயோ பிச்சுக் கொண்டு போய்விடும். அதெல்லாம் நடக்குமா? என்பதை செப்டம்பர் 5ம் தேதி வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: விசில போடுங்க நண்பிகளா! கண்ண பறிக்கும் ‘கோட்’ பட முதல் சிங்கிள்.. ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்தான்

Published by
Saranya M

Recent Posts