கேப்டன் மில்லருக்கு டஃப் கொடுக்கும் தளபதி!.. கோட் படத்தின் புது போஸ்டர் பாருங்க...

 
கேப்டன் மில்லருக்கு டஃப் கொடுக்கும் தளபதி!.. கோட் படத்தின் புது போஸ்டர் பாருங்க...
Goat poster: லியோ படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இப்படத்தில் விஜய் மட்டுமில்லாமல் அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். ஃபிரண்ட்ஸ் படத்திற்குபின் பல நடிகர்கள், நடிகைகளுடன் இணைந்து விஜய் நடிக்கும் படம் இது. இப்படத்தில் சினேகா, மீனாக்‌ஷி சவுத்ரி ஆகியோரும் நடித்து வருகிறார்கள். அதோடு பல வருடங்கள் கழித்து லைலாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதேபோல், சரோஜா படத்திற்கு பின் ஜெயராம் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதையும் படிங்க: வடிவேலுவுக்கு யாரையும் புடிக்காது!.. என்னை பாத்தாலே பயப்படுவாரு!.. நக்கல்டிக்கும் காமெடி நடிகர்.. மாநாடு எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பதால் ரசிகர்களிடையே இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில் இந்த படத்தில் மகனாக நடிக்கும் விஜயை ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையாக காட்டிவிருக்கிறார்கள். கேப்டன் மில்லருக்கு டஃப் கொடுக்கும் தளபதி!.. கோட் படத்தின் புது போஸ்டர் பாருங்க... ஏற்கனவே, இது தொடர்பான சில போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல், மீசை, தாடியை எடுத்துவிட்டு ரசிகர்களுடன் சேர்ந்து விஜய் எடுத்த செல்பி புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையும் படிங்க: அப்பாவுடனே ஐக்கியமான தனுஷ் மகன்கள்!.. அம்மா, தாத்தாவுடன் பொங்கல் கொண்டாடலயா?.. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பங்காளதேஷ், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் நடைபெறவுள்ளது. குறிப்பாக இப்படத்தின் சண்டை காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என எல்லோரும் கையில் ஏகே 47 துப்பாக்கியை வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லருக்கு டஃப் கொடுக்கும் தளபதி!.. கோட் படத்தின் புது போஸ்டர் பாருங்க...

From Around the web