கோட் படத்தின் 4வது சிங்கிள் ரிலீஸ் தேதி இதுதான்!.. சர்ப்பரைஸ் இப்படி உடைஞ்சி போச்சே!....
Goat: விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம்தான் கோட். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதற்கு முன்பே பிகில், மெர்சல் என சில படங்களில் விஜய் அப்பா - மகனாக நடித்திருந்தாலும் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட் இருக்கிறது.
அதற்கு காரணம் ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜயை மிகவும் இளமையாக காட்டி இருக்கிறார்கள். ஏற்கனவே டிரெய்லரில் வந்த சில காட்சிகள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. குறிப்பாக கோட் படத்தின் டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேநேரம், இதுவரை 3 பாடல்கள் வெளியாகியும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
இதையும் படிங்க: அஜித்தை பற்றி யோகிபாபு சொன்னதுக்கு ஆதாரம் இருக்கா? பூதாகரமாக கிளம்பிய பிரச்சினை
வெங்கட்பிரபு படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜாவே இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். முதலில் விசில் போடு பாடல் வெளியானது. அடுத்து பவதாரிணியின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டு வந்து வெளியிட்டார்கள். 3வதாக ஒரு ரொமான்ஸ் பாடல் வெளிவந்தது.
ஆனால், 3 பாடல்களுமே ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக விஜய் ரசிகர்கள் ஏமாந்து போனார்கள். அனிருத்தாக இருந்தால் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும்படி பாடல்களை போட்டிருப்பார் என சமூகவலைத்தளங்களில் யுவனை திட்ட துவங்கிவிட்டனர். ஆனால், படம் வெளியானால் பாடல்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என வெங்கட்பிரபு சொல்லியிருக்கிறார்.
கோட் படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகயுள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 31ம் தேதி இப்படத்தின் 4வது சிங்கிள் வெளியாகவுள்ளது. இந்த பாடல் கோட் படத்தில் இடம்பெற்றுள்ள ஹைலைட்டான குத்தாட்ட பாடலாக என்கிற படக்குழு.
இந்த பாடலுக்கு விஜயுடன் நடிகை திரிஷா செம ஆட்டம் போட்டிருக்கிறாராம். ஆனாலும், ரசிகர்களுக்கு அது சார்ப்பரைஸாக இருக்க வேண்டும் என நினைக்கும் வெங்கட்பிரபு 31ம் தேதி வெளியாகவுள்ள பாடல் வீடியோவை திரிஷாவின் முகத்தை காட்டாமல் உருவாக்கி இருக்கிறாராம். ஆனாலும், இந்த தகவல் வெளியே லீக் ஆகிவிட்டது.
இதையும் படிங்க: சீரியல் பாக்குறதே நிம்மதிக்கு தான் இங்கையுமா? பாக்கியலட்சுமியில் திடீர் திருப்பம்