Connect with us
vjiay

Cinema News

தளபதிக்குரிய ஃபுட் போடலைங்க! எல்லாத்துக்கும் அவர் ஒருத்தர்தான் காரணம்

Actor Vijay: இன்று விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம்தான் கோட். விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் இணைந்து லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், யோகிபாபு போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள்.

படம் ஆரம்பத்தில் இருந்து எந்தவொரு ஹைப்பும் இல்லாத நிலையில் ரிலீஸுக்கு முந்தைய ஒருவாரத்தில் படத்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் எகிற வைத்துவிட்டனர் கோட் படத்தின் படக்குழு. மாறி மாறி வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பேட்டிகள் அடிக்கடி வந்த வண்ணம் இருந்தன.

வெங்கட் பிரபு ஸ்க்ரீன் ப்ளே படத்தின் ப்ள்ஸ் என ஒரு பக்கம் பிரசாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விஜய் ரசிகர்களுக்கும் தோனியின் ரசிகர்களுக்கும் உரிய திரைப்படமாக கோட் இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறினார்கள்.

இதையும் படிங்க:என்னங்கப்பா… கோட் படத்துக்கு அஜித் ட்ரெண்ட்டில் இருக்காரு… சேதி என்ன தெரியுமா?

இன்னும் சிலர் ரசிகர்களுக்காகவே வெங்கட் பிரபு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் படம் சூப்பராக இருக்கிறது. ஆனால் யுவன் இசைதான் படத்தின் போக்கையே மாற்றி விட்டது என கூறியிருக்கிறார்.

அதாவது பின்னனி இசை சுத்தமா நல்லா இல்லை ப்ரோ. விஜயின் காதலுக்கு மரியாதை படத்தில் இருந்து நான் விஜயின் தீவிர ரசிகன் ப்ரோ. ஆனால் கோட் படத்துல இசைதான் மைனஸ். பின்னனி இசைனா எப்படி இருக்கவேண்டும்? அது சுத்தமா இல்ல. வெங்கட் பிரபு ஸ்கீரின் ப்ளே தீயாய் இருக்கும்னு சொன்னாங்க.

இதையும் படிங்க: வெண்ணக்கட்டி உடம்பு வெறி ஏத்துது!.. சைனிங் அழகை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!..

ஆனால் ஒன்னும் இல்ல. தளபதிக்கு சரியான தீனி போடல ப்ரோ. வெறுத்துப் போய்தான் ப்ரோ போறேன் என அவருடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். ஆனாலும் படம் எந்தளவுக்கு ரசிகர்களை சென்றடைந்திருக்கிறது என்பதை இன்னும் சில தினங்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top