விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!.. வெளியானது கோட் செகண்ட் லுக் போஸ்டர்...
Goat: லியோ படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் அதை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் தனது அடுத்த பட வேலையை உடனே துவங்கினார். மங்காத்தா, மாநாடு ஆகிய ஹிட் படங்களை இயக்கிய வெங்கட்பிரபுதான் இயக்குனர் என அறிவிப்பும் வெளியானது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எனவும் அதில் ஒன்று மிகவும் இளமையான, வயது குறைந்த விஜய் எனவும் சொல்லி இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். மேலும், பல வருடங்களுக்கு பின் விஜயுடன் ஜோதிகா நடிக்கிறார் என சொன்னார்கள். ஆனால், அதன்பின் அவர் நடிக்கவில்லை சினேகா நடிக்கிறார்கள் என சொல்லப்பட்டது.
இதையும் படிங்க: விஜயகாந்த் சாப்பாடு தான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா… அப்போ இத படிங்க.. சிலிர்க்கும்..!
மேலும், சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகியான மீனாட்சி சவுத்ரி நடிப்பததாக அறிவித்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் பட பாணியில் ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜயை இளமையாக காட்ட வெங்கட்பிரபு முடிவெடுத்தார். அதன்படி ஹாலிவுட் கலைஞர்களும் இப்படத்தில் பணிபுரிய துவங்கினர்.
இது ஒரு ஆங்கில பாடம்.. அந்த படம்.. இந்த படம் என பல்வேறு செய்திகளும் வெளியானது. ஆனால், வெங்கட்பிரபுவோ வாயை திறக்கவில்லை. லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்ற நிலையில், இப்படம் பற்றி எந்த அப்டேட்ட்டையும் வெளியிட வேண்டாம் எந்ன விஜய் சொல்லிவிட்டார் என சொல்லப்பட்டது.
படம் பாதிமுடிந்த விட்ட நிலையில் புதுவருடம் பிறக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்திற்கு கோட் எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிடல் விஜய் இரட்டை வேடத்தில் இருந்தார். போஸ்டரை பார்க்கும்போது அவர் அப்பா - மகன் வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது.
இந்நிலையில்தான், இன்று இப்படத்தின் செக்ண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. டபுள் விஜய் போல இப்படத்திற்கு டபுள் போஸ்டர் வெளியாகியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு புது வருட விருந்தாக அமைந்துள்ளது.