Cinema News
விசில் போடு நண்பா!.. வெளியான கோட் புரமோ வீடியோ!.. தாறுமாறா இருக்கே!…
Got: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் கோட். இப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதற்கு முன்பே அப்படி நடித்திருந்தாலும் இந்த படத்தில் டெக்னாலஜி மூலம் மகன் விஜயை இளமையாக காட்டியிருக்கிறார்கள்.
இதுவே இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் 4 பாடல்கள் வெளியானது. கடைசிப்பாடலாவது குத்துப்பட்டாக ரசிகர்களை கவர்ந்தது. அதற்கு முன்பு வெளியான பாடல்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆனாலும் தியேட்டரில் பாடல்களை பார்க்கும்போது ரசிகர்களுக்கு பிடிக்கும் என வெங்கட்பிரபு சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: முதலில் இப்படிதான் சொன்னார்… ஆனால் கடைசியில் எங்களுக்கே ஷாக்… வெங்கட் பிரபு சொன்ன அதிர்ச்சி தகவல்
இந்த படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி கிடைக்காமல் இருந்தது. 10 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்கப்பட்டும் அனுமதி கிடைக்காத நிலையில் தற்போது சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி படம் வெளியாகும் செப்டம்பர் 5ம் தேதி முதல் 6ம் தேதி வரை 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் எனவும் அரசு கூறியிருக்கிறது.
எனவே, நாளை காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியாகயுள்ளது. எனவே, பல தியேட்டர்களிலும் அட்வான்ஸ் புக்கிங் களைகட்டி வருகிறது. ஏற்கனவே கோட் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஒரு கேமியோ வேடத்தில் வருகிறார். ஏஐ மூலம் அவருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
இந்நிலையில், கோட் படத்தின் ஒரு புதிய புரமோ வீடியோவை இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும், இயக்குனர் வெங்கட்பிரபுவும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். டிரெய்லர் வீடியோவில் இருந்தது போலவே இந்த புரமோ வீடியோவிலும் அசத்தலான சண்டை காட்சிகளும் கார் சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.
ANNE VARAR VAZHI VIDU 🔥🔥 #ThalapathyThiruvizha starts from Tomorrow #GOATReleasePromo ( Last update ❤️❤️ ) pic.twitter.com/KXLLLnKAKb
— Archana Kalpathi (@archanakalpathi) September 4, 2024